Breaking News
recent

டொனால்ட் டிரம்பின் நடவடிக்கையால், இஸ்லாம் வீறுகொண்டு எழும்.!


சவூதி அரேபியாவில் முஸ்லிமாக வாழ்வது பெரிதல்ல, துபாயில் முஸ்லிமாக வாழ்வது பெரிதல்ல, அங்கு வாழக்கூடிய முஸ்லிம்களுக்கு தேவையற்ற மன உளைச்சல்களும், தேவையற்ற செலவுகளும் இருப்பதில்லை.

காலையில் எழுந்தால் ஐவேளை தொழுது கொண்டு, வேலைக்கு சென்று சம்பாதித்து, குடும்பத்துடன் மகிழ்ச்சியாக அன்றைய தினத்தை கழித்து மீண்டும் இரவில் நிம்மதியாக உறங்கும் நிலையில் அங்குள்ள முஸ்லிம்கள் வாழ்கின்றனர்.

அங்கு வாழும் முஸ்லிம்கள் இட ஒதுக்கீட்டுக்காக போராட்டம் நடத்த வேண்டியதில்லை, பள்ளிவாசலை மீட்பதற்காக ஒவ்வொரு வருடமும் போராட்டம் நடத்த வேண்டியதில்லை, மாட்டிறைச்சிக்காக முஸ்லிம்கள் கொல்லப்படுவதில்லை, விநாயகர் ஊர்வலத்தின்போது முஸ்லிம்கள் உயிரை கையில் பிடித்துக்கொண்டு உயிருக்கு அஞ்சி வாழக்கூடிய அவசியம் இல்லை, முஸ்லிம்கள் திருமணம், விவாகரத்து போன்ற சொந்த காரியங்களுக்கு தனியார் சட்டத்திற்காக போராட்டம் நடத்த வேண்டிய அவசியம் இல்லை.

சவூதி அரேபியா, துபாயில் முஸ்லிம்கள் நிம்மதியாக வாழ்வதுபோல் இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் முஸ்லிம்கள் நிம்மதியாக வாழ முடிவதில்லை.

அதை விட கொடுமையானது நரேந்திர மோடி, டொனால்ட் ட்ரம்ப் போன்ற முஸ்லிம் விரோத சக்திகளின் ஆட்சியின் கீழ் வாழ்வது நினைத்து பார்க்க முடியாத துயரங்களாகும். இஸ்லாமிய விரோதிகளின் ஆட்சியின் கீழ் ஈமானோடு வாழும் அமெரிக்க, இந்திய முஸ்லிம்களின் மனநிலை சவூதி, துபாய் முஸ்லிம்களின் மனநிலையை விட வலிமை வாய்ந்ததாக இருக்கும்.
அதேசமயம் இன்று நாம் சந்திக்க துயரங்களை விட ஆயிரம் மடங்கு, லட்சம் மடங்கு, கோடி மடங்கு துயரங்களை சவூதி அரேபியாவில் உள்ள முஸ்லிம்கள் 1400 ஆண்டுகளுக்கு முன்பே சந்தித்து விட்டார்கள்.

மக்காவிலுள்ள கஅபா ஆலயத்தில் 300 க்கும் மேற்பட்ட சிலைகளை வணங்கிக்கொண்டு உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற குல பாகுபாடு பார்த்துக்கொண்டு, கருப்பன் வெள்ளையன் என்ற நிற பாகுபாடு பார்த்துக்கொண்டு வாழ்ந்த காட்டு மிராண்டி அரபு கூட்டங்களிடம்,

இஸ்லாத்தை மறு புனர் நிர்மாணம் செய்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கொள்கையை சொல்லி ஆயிரக்கணக்கான சிலைகளை வணங்கிய மக்களை அவர்களின் கைகளாலேயே உடைத்து நொறுக்கி உலகை படைத்த ஒரே இறைவனை வணங்க வைத்தார்கள்.

உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற குல பாகுபாட்டை தகர்த்தெறிந்தார்கள். கருப்பன் வெள்ளையன் என்ற நிற பாகுபாட்டை வேரோடு பிடுங்கி எறிந்தார்கள்.

இன்று நாம் பார்க்கக்கூடிய இஸ்லாமிய விரோத சக்திகளான நரேந்திர மோடி, டொனால்ட் ட்ரம்ப் போன்றவர்களின் அப்பனுக்கெல்லாம் அப்பன் அரபி காட்டு மிராண்டி கூட்டங்கள் அன்று முஸ்லிம்களுக்கு காட்டாத எதிர்ப்பா ?

பின்னர் மக்கா, மதினா நகரம் மட்டுமல்ல முழு சவூதி அரேபியாவும் இஸ்லாமிய மயமானது. பின்னர் அரபுலகம் முழுவதையும் இஸ்லாம் ஆட்கொண்டது.

கொடுங்கோல ஆட்சியாளன் பிர்அவ்னையே கண்டு விட்ட சமுதாயம் நரேந்திர மோடியையும், டொனால்ட் டிரம்பையும் சந்திப்பது எந்த வகையிலும் பின்னடைவை ஏற்படுத்தி விடப்போவதில்லை.

முஸ்லிம்களுக்கு நரேந்திர மோடியின் வெற்றியோ, டொனால்ட் டிரம்பின் வெற்றியோ கொசுக்கடி அளவுக்கு கூட பாதிப்பை ஏற்படுத்தாது.

மாறாக எண்ணற்ற நல்லவைகள் அறியாத புறத்திலிருந்து அல்லாஹ்விடமிருந்து ஏற்படும்.

ஜார்ஜ் புஷ்ஷின் நடவடிக்கையால் அமெரிக்காவில் இஸ்லாம் வீறுகொண்டு எழுந்தது. இப்போது அதே ஜார்ஜ் புஷ்ஷின் கட்சியை சேர்ந்த டொனால்ட் டிரம்பின் நடவடிக்கையால் இன்னும் ஆயிரம் மடங்கு இஸ்லாம் வீறுகொண்டு எழும்.

மேலும் தகுதி அற்றவர்களிடம் பொறுப்புகள் ஒப்படைக்கப்படுவது மறுமை நாளின் அடையாளம் என்று இறைவனின் தூதரான நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 1400 ஆண்டுகளுக்கு முன்பு கூறிவிட்டார்கள்.
அண்ணலம் பெருமானாரின் வார்த்தைகள் உண்மைப்படுத்தப்பட்டுள்ளது.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.