Breaking News
recent

குவைத்தில் போக்குவரத்து விதி மீறலில் ஈடுபட்டால் 'நம்பர் பிளேட்' அகற்றப்படும்.!


குவைத்தில் சாலை விதிகளை மீறுவோர் மற்றும் ஒழுங்கற்ற முறையில் வாகனங்களை பார்க்கிங் செய்வோரை திருத்த குவைத் போலீஸார் வித்தியாசமான மன உளச்சல் தரும் தண்டனையை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

சாலை விதிமீறல் குற்றங்கள் அதிகமதிகம் இளைஞர்களாலேயே செய்யப்படுவதாக கூறும் குவைத் காவல்துறை இனிமேல் முறையாக பார்க்கிங் செய்யவிட்டாலோ அல்லது போக்குவரத்திற்கு தடங்கள் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டாலோ அந்த வாகனத்தின் நம்பர் பிளேட்டை கழட்டி எடுத்து சென்றுவிடுவர் மேலும் என்ன காரணத்திற்காக நம்பர் பிளேட் அகற்றப்பட்டது அந்த நம்பர் பிளேட்டை மீண்டும் எந்த அலுவலகத்தில், எந்த அதிகாரியை சந்திக்க வேண்டும் என்ற ஸ்டிக்கரையும் ஒட்டி விட்டு செல்வார்கள்.

நம்பர் பிளேட் இல்லாத நிலையில் வாகனங்களை இயக்குவது குவைத்தில் முற்றிலும் தடை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. பொது இடங்கள், பள்ளிகள் மற்றும் மருத்துவமனை பகுதிகளும் இந்த புதிய நடவடிக்கைக்கு உட்பட்டதே.

20 குவைத் தினாரை அபராதமாக செலுத்தி ஒரு நாள் கழித்து அதிகபட்சம் 4 மாதங்களுக்குள் நம்பர் பிளேட்டை பெற்றுக் கொள்ள வேண்டும். மேலும் நம்பர் பிளேட் இல்லாத நிலையில் வாகனத்தை எடுத்துச் செல்ல விரும்புவோர் போலீஸ் அதிகாரிகளின் அனுமதியுடன் ரெக்கவரி வாகனத்தில் மட்டுமே எடுத்துச் செல்ல முடியும், ஒட்டிச் செல்ல முடியாது என்றும் தெரிவித்துள்ளனர்.

Source: Gulf News
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.