Breaking News
recent

வாட்ஸ் அப்பில் Animated GIFsயை இணைத்து கொள்ளும் வசதி.!


சமூகவலைதளங்களில் முன்னணி வகிக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது Animated GIFs அனுப்பும் வசதி புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.

இந்த வசதியானது ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்ட் போன்களில் தற்போது செயல்படுத்தப்பட்டுள்ளது.

நாம் நமது நண்பர்களுடன் வாட்ஸ் அப்பில் மெசேஜ் மூலம் உரையாடும் போது அதில் இந்த Animated GIFsயை இணைத்து கொள்ளலாம் மற்றும் நாம் ஒரு வீடியோவை எடுத்து அதை 7 நொடிகளில் Animated GIFs ஆக கன்வெர்ட் செய்து மற்றவர்களுக்கு அனுப்பலாம்.

எப்படி அனுப்புவது?


முதலில் நாம் யாருக்கு மெசேஜ் அனுப்ப நினைக்கிறோமோ அவர்களுடனான உரையாடல் தளத்தை தொடங்க வேண்டும்.

பின்னர் எப்போதும் நாம் மீடியாவை இணைக்க பயன்படுத்தும் ‘ ’ யை கிளிக் செய்து பின்னர் புகைப்படம் மற்றும் வீடியோ கேலரியை செலக்ட் செய்ய வேண்டும்.

இப்போது எல்லா புகைப்படம் மற்றும் வீடியோ நம் முன்னர் உள்ள செல்போனில் தெரியும்.

உடனே GIFs தலைப்புடன் Search ஐகானை பட்டனை அழுத்தி நாம் எந்த எதை நம் நண்பர்களுக்கு அனுப்ப நினைக்கிறோமோ அதை கிளிக் மற்றும் Attach செய்து அனுப்பலாம். 
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.