Breaking News
recent

முகத்தை காட்டமறுத்த, முஸ்லிம் சகோதரிக்கு 49 இலட்சம் அபராதம்.!


இத்தாலியில் நாடாளுமன்ற மேயர் இஸ்லாமிய பெண்ணின் முகத்தில் உள்ள முக்காடை கழட்ட சொல்லியும் அப்பெண் அதை கழட்டாததால் அந்த பெண்ணுக்கு €30,600(ரூ.4914,366 இலங்கை மதிப்பீட்டின்படி) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இத்தாலி நாட்டில் இளைஞர்களுக்கான பாராளுமன்றம் நடைபெறுவது வழக்கம். அதில் பல இளைஞர்கள் கலந்து கொண்டு பேசி தங்கள் வாதங்களை மேயரிடம் முன்வைப்பார்கள்.

அதன்படி நேற்று -11- நடைபெற்ற நிகழ்ச்சியில், இளைஞர் ஒருவர் பேசிக் கொண்டிருக்க அதை அவரின் தாய், பார்வையாளர்கள் வாயிலில் அமர்ந்து கொண்டு பார்த்து கொண்டிருந்தார்.

இஸ்லாமிய பெண்ணான அவர் தனது முகத்தை வெளியில் காட்டாமல் கருப்பு துணியால் ஆன முக்காடை முகத்தில் அணிந்திருந்தார்.

அதை பார்த்த குறித்த நாடாளுமன்ற மேயர் முகத்தை மூடி கொண்டு இங்கு அமர கூடாது, அந்த முக்காடை கழட்டுமாறு கூறியுள்ளார்.

இப்படி பல முறை மேயர் சொல்லியும் அந்த பெண் அதை செய்ய மறுத்துள்ளார்.

இதனால் மேயர் ஆணைக்கிணங்க அந்த பெண் பொலிசாரால் அந்த இடத்தை விட்டு வெளியேற்றபப்ட்டுள்ளார்.

பின்னர் நீதிமன்றத்தில் அவர் மீது அவமதிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டது.

பின்னர் அவருக்கு சிறை தண்டனை தளர்த்தப்பட்டு, அபராத தொகையாக €30,600 கட்ட வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.