Breaking News
recent

ஒரே போனில் 4 வாட்ஸ்அப் அக்கவுண்ட்டா? எப்படி இன்ஸ்டால் பண்ணனும்.!


"ஸ்மார்ட்போனும் வாட்ஸ்அப்பும் தான் இன்றைய இளைஞர்களின் பொழுதுபோக்கு.

 அதில் பிடித்தவர்கள், நெருங்கிய நண்பர்கள் என எல்லோருக்கும் ஒரே அக்கவுண்டில் இருந்து மெசேஜ் சில சமயங்களில் சிக்கலை உண்டாக்கும். அதிலிருந்து சமாளிக்க இரண்டு போன் பயன்படுத்துவது எல்லா நேரத்திலும் சாத்தியமில்லை. 

உங்களிடம் ஒன்றுக்கு மேற்பட்ட சிம் கார்டுகள் இருக்கின்றன. ஆனால் உங்கள் போனில் இதுவரையிலும் ஒரு வாட்ஸ்அப் அக்கவுண்டைத் தான் பயன்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால் தற்போது ஒரே போனில் 4 வாட்ஸ்அப் அக்கவுண்டுகளைப் பயன்படுத்த முடியுமென்றால்? ஆச்சரியமாக இருக்கிறதா? இது கதையல்ல. 

முற்றிலும் உண்மை. ஆம். உங்களுடைய ஒரே போனிலேயே 4 வாட்ஸ்அப் அக்கவுண்ட்டுகளைப் பயன்படுத்த முடியும். அதற்கான வழிமுறைகள் இதோ... நீங்கள் ஏற்கனவே பயன்படுத்திக் கொண்டிருக்கும் வாட்ஸ்அப் தான் உங்களுடைய முதல் வாட்ஸ்அப் அக்கவுண்ட். அதை நீங்கள் பிளே ஸ்டோர் மூலம் நேரடியாக டவுன்லோடு செய்ய வேண்டும். 

அடுத்ததாக, OGWHATSAPP என்பது மிகவும் பிரபலமான ஒரு அப்ளிகேஷன். இதைப் பயன்படுத்தி ஒன்றுக்கு மேற்பட்ட வாட்ஸ்அப் கனெக்க்ஷனை இன்ஸ்டால் செய்து கொள்ள முடியும். இதன் மூலம் இன்ஸ்டால் செய்யப்படுவது உங்களுடைய இரண்டாவது அக்கவுண்டாகப் பயன்படுத்த முடியும். 

மூன்றாவதாக, SAWHATSAPP என்னும் மற்றொரு ரீ- பில்டு வாட்ஸ்அப் செயலி. இது வாட்ஸ்அப்பினுடைய குளோனிங் வெர்ஷன் என்று சொல்வார்கள். இது தான் உங்களுடைய மூன்றாவது வாட்ஸ்அப். அடுத்து உங்களுடைய போனில் ENWHATSAPP என்பதில் சென்று மற்றொரு வாட்ஸ்அப் கணக்கை டவுன்லோடு செய்து கொள்ளலாம். 

இது உங்களுடைய நான்காவது வாட்ஸ்அப் கணக்காகப் பயன்படுத்த முடியும். இந்த நான்கு வாட்ஸ்அப் கணக்குகளையும் இன்ஸ்டால் செய்தவுடன், செட்டிங்ஸ்ஸில் சென்று உங்களுடைய போன் நம்பர்களை ரெஜிஸ்டர் செய்து கொள்ள வேண்டும். 

இதில் நீங்கள் வெவ்வேறு மொபைல்களில் பயன்படுத்தும்  நான்கு சிம் கார்டு நம்பர்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இன்ஸ்டால் செய்தவுடன் நான்கு வாட்ஸ்அப் கணக்குகளும் உங்கள் போன் ஸ்கிரீனில் தோன்றும்." -
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.