Breaking News
recent

அபுதாபியில் 31 லட்சம் திர்­ஹாம்க­ளுக்கு விற்பனையான வாகன Number Plate.!


ஐக்­கிய அரபு எமி­ரேட்ஸில் ‘No 1’ வாகன இலக்கத் தகடு 31 லட்சம் திர்­ஹாம்­க­ளுக்கு ஏலத்தில் விற்­பனை செய்­யப்­பட்­டு­ள­்ளது.

வாக­னங்­க­ளுக்­கான விசேச  number plate ஏல விற்­பனை ஐக்­கிய அரபு எமி­ரேட்ஸின் அபுதாபியில் கடந்த சனிக்­கி­ழமை நடை­பெற்­றது. இதன்­போது, ‘No 1’ எனும் இலக்கத் தகடை வாங்­கு­வதற்கு கடும் போட்டி நில­வி­யது.

750 பேர் உட்பட இந்த இலக்கத் தகடை வாங்­கு­வ­தற்கு கோடீஸ்­வ­ரர்கள் பலர் போட்­டி­யிட்­டனர். இறு­தியில் 3.1 மில்­லியன் ஐக்கிய அரபு திர்­ஹாம்­க­ளுக்கு இந்த இலக்கத் தகடு விற்­ப­னை­யா­கி­யது.

32 வய­தான அப்­துல்லா அல் மஹிரி இந்த இலக்­கத்­த­கட்டை வாங்­கினார். இதற்கு அடுத்­த­தாக ‘‘No 7’ எனும் இலக்கத் தகடு அதிக விலைக்கு விற்­ப­னை­யா­கி­யது. 1.34 கோடி திர்­ஹாம்­க­ளுக்கு 7 எனும் இலக்கத் தகடு விற்­ப­னை­யா­கி­யது.

மூன்­றா­வ­தாக ‘No 50 எனும் இலக்கத் தகடு 68 லட்சம் திர்ஹாம்  விலைக்கு விற்­ப­னை­யா­கி­யது. 22, 10, 6, 11, 111, 11111, 1111, 501, 2016 மற்­றும் 1966 ஆகிய இலக்கத் தக­டு­களும் இந்த ஏலத்தில் அதிக விலைக்கு விற்­ப­னை­யா­கின.

இந்த ஏல விற்­ப­னையில் அதிக எண்­ணிக்­கை­யானோர் பங்­கு­பற்­றி­யமை மகிழ்ச்­சி யளிக்­கி­றது என அபுதாபி பொலிஸ் தளபதியான மேஜர் ஜெனரல் மொஹம்மத் கல்பான் அல் ரொமைதி தெரிவித்துள்ளார்
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.