Breaking News
recent

திடீர் பணக்காரர்களான 3 ஓமன் மீனவர்கள்.!(photos)


கொடுக்கிற தெய்வம் கூரையை பீய்த்துக்கொண்டு கொடுக்கும்' என தமிழ் மக்கள் பேசிக் கொள்வார்கள். மேற்படி சொல்வழக்கிற்கு ஏற்ப ஓமன் மீனவர்கள் மூவர் ஒரே நாளில் திடீர் பணக்காரர்களாக உருவெடுத்துள்ளனர்.

ஆம்பர்கிரிஸ் (Ambergris) எனும் ஒருவகை மெழுகை Sperm Whale எனப்படும் திமிங்கிலங்கள் தமது வயிற்றில் சுரப்பவற்றை அவ்வப்போது வெளியேற்றும். இப்படி திமிங்கிலங்களால் வெளியேற்றப்பட்டு மிதக்கும் ஆம்பர்கிரிஸ் மெழுகுகள் கடும் நாற்றமடிக்கும் ஆனால் ஓரிரு தினங்களுக்குப் பின் அதுவே நறுமணமாக மாறும்.

காலித் அல் சினானி மற்றும் அவரது இரு நண்பர்களும் மீன் பிடிக்கச் செல்லும் போது இந்த ஆம்பர்கிரிஸ் மெலுகுகள் கடலில் மிதந்துள்ளன. இவற்றை கயிற்றை கட்டி சேகரித்து வயிறு குமட்டக் குமட்ட கரைக்கு கொண்டு வந்தால் சுமார் 80 கிலோ மெழுகு தேறியுள்ளது.

கிலோ 7500 ஓமன் ரியால் என விலைவைத்து அமீரக வியாபாரிகள் பேரம் பேச, விஷயத்தை கேள்விப்பட்ட சவுதி வியாபாரி ஒருவர் கிலோ 13,500 என வாங்கிக் கொள்வதாக வழிய வர, மீனவ நண்பர்கள் மூவரும் ஒரே நாளில் திகட்டத் திகட்ட ஏறக்குறைய 1 மில்லியன் ஓமன் ரியாலுக்கு சொந்தக்காரர்களாக உள்ளனர்.

தகவலுக்காக... 1 ஓமன் ரியாலின் இன்றைய மதிப்பு 173.56 காசுகள்.

34:36   قُلْ اِنَّ رَبِّىْ يَبْسُطُ الرِّزْقَ لِمَنْ يَّشَآءُ وَيَقْدِرُ وَلٰـكِنَّ اَكْثَرَ النَّاسِ لَا يَعْلَمُوْنَ‏ 
34:36. “நிச்சயமாக என்னுடைய இறைவன் தான் நாடியவர்களுக்கு, செல்வத்தை விசாலப்படுத்துவான்; இன்னும், (அதை, தான் நாடியவர்களுக்கு சுருக்கியும் விடுகிறான் - எனினும் மனிதரில் பெரும்பாலோர் (இதை) அறிய மாட்டார்கள்” என்று (நபியே!) நீர் கூறும்.  







Source: Khaleej Times
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.