Breaking News
recent

2 வயதுக்கும் குறைவான குழந்தைகளிடம் செல்ஃபோன்களா? இதைப் படியுங்கள்.!



American Academy of pediatrics வெளியிட்டுள்ள எச்சரிக்கை விதிகளின் படி, 2 வயது மற்றும் அதற்குக் குறைவான குழந்தைகளிடம் செல்ஃபோன், லேப்டாப் போன்ற கேட்ஜெட்டுகளை அளிப்பது, பார்க்கச் செய்வது ஆபத்தில் முடியும் என எச்சரித்துள்ளது.

2 வயதுக்குள் குழந்தைகளின் மூளை மும்மடங்காக அளவில் வளர்கிறது. இந்த பருவத்தில் அவர்களிடம் கேட்ஜெட்டுகளான, செல்ஃபோன், லேப்டாப் போன்றவற்றை அளித்து காட்சிகளைத் தொடர்ந்து பார்க்கச் செய்வதால், சுற்றுச்சூழல் குறித்த பிரக்ஞை அற்றுப்போதல், காது கேட்கும் குறைபாடுகள், கற்றல் குறைபாடுகள், பார்வைக் கோளாறுகள், அடம்பிடிக்கும் போக்கு ஆகியவை அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக எச்சரித்துள்ளது.

மேலும், இத்தகைய கேட்ஜெட்டுக்கு அடிமையாகும் பழக்கம், கற்றல் குறைபாடுகளுடன் சேர்த்து, தன்னளவில் தன்னை ஒழுங்குபடுத்திக் கொள்வதையும், சமூக பழக்கவழக்கங்களிலிருந்தும் முழுமையாக அவர்களை அந்நியமாக்கும் அபாயமும் உள்ளது.

Center for Disease Control and Prevention 2010-ஆம் ஆண்டு நடத்தியுள்ள ஆய்வில், படுக்கையறையில் கேட்ஜெட்டுகளைப் பயன்படுத்தும் குழந்தைகள், சாதாரண குழந்தைகளை விட, அதிக உடல் எடையுடன் இருப்பதாகவும், ஒபிசிட்டி சார்ந்த குறைபாடுகளால் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

2010-ஆம் ஆண்டு, ப்ரிஸ்டால் பல்கலைக்கழகம், கனடாவில் நடத்திய ஆய்வில், கேட்கெட்டுகளைப் பயன்படுத்தும் சிறு குழந்தைகளில், 6-இல் ஒரு குழந்தைக்கு ஆட்டிஸம், பைபோலார் குறைபாடு, சைகோசிஸ் போன்ற ஏதோ ஒரு நோயின் அறிகுறிகள் தென்படுவதாகத் தெரிவித்துள்ளனர்.

2013, டிசம்பரில், டொரோண்டோ பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், டாக்டர் ஆண்டனி மில்லர் நடத்திய ஆய்வில், கேட்ஜெட்டுகளின் பயன்பாட்டில், 2A (கேன்சர் விளைவிக்கலாம்) மற்றும் 2B(கேன்சர் விளைவிக்கும்) இரு கதிர்வீச்சை வகைப்படுத்தியுள்ளனர். இதனால், குழந்தைகளுக்கு உடல் ரீதியாகவும், மனதளவிலும் பெரிய பாதிப்பிற்கு வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிவிக்கின்றது இந்த ஆய்வு.

ஆகவே இரு வயதுக்குள் இருக்கும் குழந்தைகளுக்கு கேட்ஜெட்டுகளை அளிக்காமலும், 3 வயதுக்கு மேலுள்ள குழந்தைகளுக்கு ஒன்று முதல் இரண்டு மணிநேரம் வரை மட்டுமே கேட்ஜெட்டுகளை அளிக்க பரிந்துரைக்கிறது American Academy of pediatrics.

கேட்ஜெட்டுகளைத் தவிர்த்து, குழந்தைகளின் உடல் மற்றும் மன நலனுக்கு, பெற்றோர்கள் நேரம் அளியுங்கள் என்கிறார்கள் குழந்தைகள் நல மருத்துவர்கள் ஒரே குரலில்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.