Breaking News
recent

தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்க கட்டணம் ரத்து நவம்பர் 24 வரை நீட்டிப்பு.!


மத்திய அரசால் செல்லாது என அறிவிக்கப்பட்ட 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்றுவதற்காக பொதுமக்கள் தொடர்ந்து வங்கிகளில் திரண்ட வண்ணம் உள்ளனர். கால அவகாசம் எதுவும் கொடுக்காமல் திடீரென அறிவிக்கப்பட்டதாலும், ஏடிஎம்-களில் புதிய நோட்டுக்கள் கிடைக்க தாமதம் ஆனதாலும் மக்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். 

இந்நிலையில், தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணத்தை செலுத்தும் வாகன ஓட்டிகளிடம் 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை வாங்குவதற்கு ஊழியர்கள் மறுத்ததால் பிரச்சனை ஏற்பட்டது. சில்லரை தட்டுப்பாடும் ஏற்பட்டது. 


இதன் காரணமாக வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பிரச்சினையை சமாளிப்பதற்காக சில இடங்களில் கட்டணம் வசூலிக்காமல் வாகனங்களை செல்ல அனுமதித்தனர்.

இந்த விவகாரம் மத்திய அரசின் கவனத்திற்கு செல்ல, சுங்க கட்டணம் ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டது. அனைத்து சுங்கச்சாவடிகளிலும் நவம்பர் 11-ம் தேதி நள்ளிரவு வரை சுங்கக் கட்டணம் ரத்து செய்யப்பட்டது. பின்னர் நவம்பர் 14, நவம்பர் 18 என அடுத்தடுத்து இந்த சலுகை நீட்டிக்கப்பட்டது.

இந்த சலுகை நாளை நள்ளிரவு 12 மணியுடன் முடிய உள்ள நிலையில், அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளிலும் உள்ள சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டண ரத்து நவம்பர் 24-ம் தேதி நள்ளிரவு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை மத்திய சாலைப் போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்காரி தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.