Breaking News
recent

விமான நிலையங்களில் நவ.21 வரை பார்க்கிங் கட்டணம் ரத்து.!


விமான நிலையங்களில் நவம்பர் 21-ம்தேதி நள்ளிரவு வரை பார்க்கிங் கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசால் செல்லாது என அறிவிக்கப்பட்ட 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்றுவதற்காக பொதுமக்கள் தொடர்ந்து வங்கிகளில் திரண்ட வண்ணம் உள்ளனர். கால அவகாசம் எதுவும் கொடுக்காமல் திடீரென அறிவிக்கப்பட்டதால், பொதுமக்கள் ரூபாய் நோட்டுக்களை மாற்ற முடியாமல் அவஸ்தைப்படுகின்றனர்.

இதனால் போக்குவரத்து, மருத்துவமனை, குடிநீர், மின்சாரம் மற்றும் அரசு வசூலிக்கும் உள்ளிட்ட பல்வேறு வரிகள் என அத்யாவசிய தேவைகளுக்கு பழைய ரூபாய் நோட்டுக்களை பயன்படுத்தலாம் என மத்திய அரசு அறிவித்தது.


 சில்லரை பிரச்சனையால் வாகன போக்குவரத்து முடங்காமல் இருக்க, அனைத்து சுங்கச்சாவடிகளிலும் நவம்பர் 18-ம்தேதி நள்ளிரவு வரையில் சுங்கக் கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அந்த வரிசையில் இப்போது விமான நிலையங்களில் பார்க்கிங் கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

பயணிகளின் கோரிக்கையை ஏற்று வரும் 21-ம்தேதி வரை அனைத்து விமான நிலையங்களிலும் பார்க்கிங் கட்டணம் வசூலிப்பது நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக விமான போக்குவரத்து துறை இணை மந்திரி ஜெய்ந்த் சின்கா டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.