Breaking News
recent

2025 ஆம் ஆண்டில் எமிரேட்ஸ் விமான சேவை, துபாய் அல் மக்தூம் விமான நிலையத்தில் இருந்து இயக்க முடிவு.!


துபையில் 24 மணிநேரமும் பரபரப்பாக செயல்படும் சர்வதேச விமான நிலையத்தின் ஒரு பகுதியான டெர்மினல் 3ல் இருந்து தற்போது எமிரேட்ஸ் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

2025 ஆம் ஆண்டிற்குள் எமிரேட்ஸ் விமானங்களின் மொத்த சேவையும் அல் மக்தூம் சர்வதேச விமான நிலையத்திற்கு மாற்றப்படுவதுடன் எமிரேட்ஸ் விமானங்களின் இருப்பிடமாகவும் துபையின் முதன்மை (Home for Emirates Airlines & Dubai's Primary Airport) விமான நிலையமாகவும் செயல்படும்.

2000 ஆம் ஆண்டு முதல் வருடத்திற்கு சராசரியாக 13 சதவிகித கூடுதல் பயணிகளை கையாளும் துபை விமான நிலையங்கள் கடந்த 2015 ஆம் ஆண்டு மட்டும் உலகிலேயே அதிகமாக 78 மில்லியன் பயணிகளை கையாண்டுள்ளது. 


எனவே, அதிகரிக்கும் பயணிகளின் சேவையை கருத்திற்கொண்டு துபை சர்வதேச விமான நிலையமும், அல் மக்தூம் சர்வதேச விமான நிலையமும் இன்னும் பல்வேறு வசதிகளுடன் விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் துவங்கியுள்ளன.

துபையின் 2 சர்வதேச விமான நிலையங்களிலும் அனைத்து விரிவாக்கப் பணிகளும் நிறைவுறும் போது ஆண்டிற்கு 146 மில்லியன் பயணிகளை கையாளும் திறன் பெற்றிருக்கும்.

Source: 7 Days / msn
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.