Breaking News
recent

மக்கா - மதீனாவை இணைக்கும் ரெயில் சேவை 2018 ல் தொடங்கும்.!


புனித நகரங்களான மக்காவையும் மதீனாவையும் இணைக்கும் 'ஹரமைன்' அதிவேக ரெயில் சேவை 2018 மார்ச்சில் தொடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
முஸ்லிம்களின் புனித நகரங்களான சவூதி அரேபியாவின் மக்காவையும் மதீனாவையும் இணைக்கும் ரெயில் சேவைக்கான பணிகள் 2017 இறுதியில் பூர்த்தியாகும் என்றும், 2018 மார்ச் மாதம் ரெயில் சேவை தொடங்கும் என்றும் பிரபல அரபு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
12 ஸ்பானிஷ் நிறுவனங்களும், இரண்டு சவூதி நிறுவனங்களும் இணைந்து கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் இதன் வேலைகளை செய்து வருகின்றன.
இதற்கான வேலைகள்  இவ்வருடம் முடிவடையும் என எதிர்பார்க்கப் பட்டது. ஆனால் வேலைகள் பூர்த்தியடையாததைத் தொடர்ந்து. வரும் 2018 மார்ச்சில் ரெயில் சேவை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 450 கிலோ மீட்டர் தூரம் செயல்படவுள்ள இச்சேவைக்கு சுமார் 35 ரெயில்கள் பயன்படுத்தப்படவுள்ளன.
மக்காவிற்கும் மதீனாவிற்கும் இடையே உள்ள வழிகளில் மக்கா, ஜித்தா, சுலைமானியா, ஜித்தா விமான நிலையம் மற்றும் ராபிக் ஆகிய இடங்களில் ரெயில் நிலையங்கள் அமைக்கப் பட்டுள்ளன. 
இதில் ராபிக் முதல் மதீனா வரை ரெயில்வே பாலங்கள் அமைக்கும் வேலைகள் முடிவடைந்துள்ளன. இனி மக்கா.ஜித்தா இடையேயான வேலைகள் மீதமுள்ளமை குறிப்பிடத்தக்கது.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.