Breaking News
recent

2017-ம் ஆண்டிற்கான அரசு விடுமுறை தினங்கள் அறிவிப்பு.!


2017-ம் ஆண்டிற்கான பொது அரசு விடுமுறை தினங்களை தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் அரசு அறிவித்திருக்கும் 22 அரசு விடுமுறை தினங்களில் அரசு கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து அலுவலங்களுக்கும் விடுமுறை அளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழக ஆளுநரின் ஆணைப்படி அரசு தலைமை செயலாளர் ராம மோகன ராவ் பொது விடுமுறை தினங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

மொத்தமுள்ள 22 விடுமுறை தினங்களில் 8 விடுமுறை தினங்கள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வருவது குறிப்பிடத்தக்கது.

2017-ம் ஆண்டிற்கான அரசு விடுமுறை தினங்கள் பட்டியல்:

ஜனவரி 1 - ஆங்கிலப் புத்தாண்டு 
ஜனவரி 14 - பொங்கல் 
ஜனவரி 15- திருவள்ளுவர் தினம் 
ஜனவரி 16- உழவர் திருநாள் 
ஜனவரி 26- குடியரசு தினம் 
மார்ச் 3 - தெலுங்கு வருடப்பிறப்பு 
ஏப்ரல் 1- வங்கிகள் ஆண்டுக்கணக்கு முடிவு 
ஏப்ரல் 9-மகாவீர் ஜெயந்தி 
ஏப்ரல் 14- தமிழ்ப்புத்தாண்டு 
மே 1 - உழைப்பாளர் தினம் 
ஜூன் 6- ரம்ஜான் 
ஆகஸ்ட் 14 - கிருஷ்ண ஜெயந்தி 
ஆகஸ்ட் 15- சுதந்திர தினம் 
ஆகஸ்ட் 25- விநாயகர் சதுர்த்தி 
செப்டம்பர் 2- பக்ரீத் 
செப்டம்பர் 29- ஆயுத பூஜை 
செப்டம்பர் 30-விஜய தசமி 
அக்டோபர் 1- மொகரம் 
அக்டோபர் 2-காந்தி ஜெயந்தி 
அக்டோபர் 18- தீபாவளி 
டிசம்பர் 1 - மிலாதுன் நபி 
டிசம்பர் 25- கிறிஸ்துமஸ் 
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.