Breaking News
recent

துபாயில் ரூ 18.16 லட்சத்திற்கு விலை போன அபூர்வ கிளி.!( படங்கள் )


துபாயில் முஹமது முஸ்தபா என்பவர் 300க்கு மேற்பட்ட பல வண்ண நிறங்களையுடைய அபூர்வ கிளிகளை வளர்த்து விற்பனை செய்து வருகிறார். 

துபை அல் ருவைய்யா பகுதியில் 5 ஹெக்டேர் பரப்பளவு பண்ணையில் 3000 திர்ஹம் மதிப்புள்ள ஒரு ஜோடி பச்சைக்கிளிகள் முதல் 1 லட்சம் வரை விலைபோகும் பலரக கிளிகள் என மொத்தமாக பல மில்லியன் திர்ஹத்திற்கு விலைபோகும் கிளிகளை வளர்த்துவருகிறார். ஆரம்பத்தில் பொழுதுபோக்காக ஆரம்பித்தவர் தற்போது அதையே முழுநேர தொழிலாக செய்து வருகிறார்.

கடந்த வாரம் ஜெர்மானியை சேர்ந்த அபூர்வ பறவையினங்களை சேகரிக்கும் ஒருவர், நீல ப்ளம் நிற தலையுடைய கிளியை (blue plum headed parakeet) வாங்குவதற்காகவே மட்டுமே ஜெர்மானியிலிருந்து துபை வந்திருந்தார் என்பதுடன் 1 லட்சம் திர்ஹத்திற்கு ( இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 18.165 லட்சம்  ) இந்தக் கிளியை வாங்கிச் சென்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், போர்ச்சுகீசியர் ஒருவர் 5 ரக கிளிகளை 1 லட்சம் திர்ஹத்திற்கு வாங்கிச் சென்றுள்ளார்.

மாறுபட்ட இன கிளிகளை வளர்த்து விற்கும் முஹமது முஸ்தபா எனும் இந்த பாகிஸ்தானியரிடம், உலகில் வேறு எங்குமே விற்பனைக்கு கிடைக்காத கிளிகளான Alexandrine parakeet, plum heads, mustangs, long-tailed parakeets and bronze fallows  போன்ற பல ரகங்கள் உள்ளன என்பதும், வளைகுடா பிராந்தியத்திலேயே இவருடைய கிளிப்பண்ணையே மிகப்பெரிது என்ற சிறப்பையும் பெற்றுள்ளது.

நமக்கும் பேராசை எல்லாம் இல்லைங்கஈ ஒரே ஒரு நீல ப்ளம் தலை கிளி ஒன்று கிடைத்தால் போதும் ஊருக்கு போய் செட்டிலாகிவிடலாம்!


Source: Gulf News

VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.