Breaking News
recent

குவைத்தில் 15 மில்லியன் தினார் மதிப்புள்ள கடத்தல் மதுபானம் பிடிபட்டது.!


குவைத் வரலாற்றில் முதன்முறையாக சில்லறை வர்த்தக மதிப்பில் 15 மில்லியன் குவைத் தினாருக்கு இணையான கடத்தல் மதுபானங்கள் பிடிபட்டன. இந்த இழிதொழிலை நடத்தி வந்த ஈரானியர் ஒருவரும் குவைத் நாட்டவர் ஒருவரும் பிடிபட்டனர்.

குவைத் நாட்டில் 1964 ஆம் ஆண்டு முதல் மதுபானம் தயாரிப்பது, இறக்குமதி செய்வது, விற்பது, குடிப்பது, கடத்துவது என அனைத்து நிலைகளிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

குவைத் ரகசிய போலீஸார் விரித்த வலையில் சிக்கிய குவைத்தி கைகாட்டியதை தொடர்ந்து தன்னை தொழிலதிபராக காட்டிக்கொண்டிருந்த ஈரானியும் அவர்கள் இருவரும் கடத்தி வந்த 15 மில்லியன் குவைத் தினார் மதிப்புடைய 15,000 மதுபான பெட்டிகளும் பிடிபட்டன.

கடந்த ஆகஸ்ட் மாதம் 20 ஆம் தேதி, அர்தியா பகுதியில் பர்வானியா பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி வேட்டையில் ஒரு இந்திய பெண் தலைமையில் செயல்பட்டு வந்த கள்ளச்சாராய தொழிற்சாலை ஒன்று பிடிபட்டதும் நான்கு இந்தியர்களும் கைது செய்யப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.






Source: Gulf News
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.