Breaking News
recent

துபாயில் ஆம்புலன்ஸூக்கு வழிவிடாத 128 ஓட்டுனர்களுக்கு அபராதம்.!


துபையில் உயிர்காக்கும் சேவையில் ஈடுபட்டுள்ள ஆம்புலன்ஸ் தேவைக்காக தினமும் 500க்கு மேற்பட்ட அவசரகால அழைப்புகள் வருகின்றன, இவை பல்வேறு காரணங்களை உள்ளடக்கிய அழைப்புகள். 

இந்த அழைப்புக்கள் சராசரியாக 8 நிமிடங்களில் நிறைவேற்றப்படுகின்றன என்றும் இதையே எதிர்வரும் 2020 ஆம் ஆண்டுக்குள் 4 நிமிடங்களில் நிறைவேற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும் வருகின்றன.

உயிர் காக்கும் சேவையில் ஈடுபட்டுள்ள இந்த ஆம்புலன்ஸூகளுக்கு பெரும் தடையாக இருப்பவர்கள் பிற வாகன ஓட்டுனர்களே. 

விபத்துப் பகுதிக்கோ அல்லது உயிருக்கு போராடுபவர்களை ஏற்றிச் செல்லும் நிலையிலோ ஆம்புலன்ஸ் வாகன சைரன் ஒலி & ஒளியை கேட்டும் வழிவிடாமல் அல்லது என்ன செய்வது என்று தெரியாமல் அல்லது வேண்டுமென்றே அலட்சியமாக பாதையை மறைத்துக் கொண்டோ ஆம்புலன்ஸ் டிரைவர்களை சங்கடப்படுத்துவோரிடம்,"இதுவே தங்களது உறவினர்களாக இருந்தால் இப்படிச் செய்வார்களா" என ஆம்புலன்ஸ் டிரைவர்கள் ஆதங்கத்துடன் வினவுகின்றனர்.

நடப்பு 2016 ஆம் ஆண்டில் இதுவரை 128 பிற வாகன ஓட்டுனர்கள் மீது ஆம்புலன்ஸிற்கு வழிகொடுக்காமல் இருந்ததற்காக அபராதங்கள் விதிக்கப்பட்டுள்ளன.

 மேலும், 2015 ஆண்டில் மட்டும் 49 பிரசவங்கள் ஆம்புலன்ஸ் வாகனத்திற்குள்ளேயே நிகழ்ந்துள்ளன, காரணம் பிற வாகன டிரைவர்களால் சரியான நேரத்திற்கு மருத்துவமனைக்கு செல்ல முடியாததே. 

இந்நிலைக்கு புதிய டிரைவர்களும் ஒரு காரணம் என்றும் அவர்களுக்கு ஓட்டுனர் பயிற்சி பள்ளிகளிலேயே ஆம்புலன்ஸூக்கு வழிவிடுவது குறித்த பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும் என்ற குரலும் எழுந்துள்ளது.

ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு வழிவிடாத பிற வாகன ஓட்டுனர்களுக்கு 500 திர்ஹம் மற்றும் 4 கரும்புள்ளி என அபராதம் விதிக்கப்பட்டு வரும் நிலையில் இதை இன்னும் அதிகப்படுத்த வேண்டும் என்ற திட்டமும் பரிசீலணையில் உள்ளதாம்.

ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு வழிவிடுதல் என்பது இன்னொரு உயிருக்கு நீங்கள் தருகின்ற ஆயுள் நீட்டிப்புக்கான அரியதொரு வாய்ப்பு என்பதால் தயவுசெய்து ஆம்புலன்ஸ் வாகனங்கள் தடங்களின்றி, சிரமமின்றி கடந்து செல்ல வாய்ப்பு தாருங்கள்.

அனைத்து வாகன ஓட்டுனர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், துபை போலீஸ், துபை ஆம்புலன்ஸ் சேவையகம் (DCAS) ஆகியவை இணைந்து ‘Give way for emergency vehicles, save a life’  எனும் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

Source: Gulf News
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.