Breaking News
recent

குவைத்தில் 10 வருடங்களாக வேலைக்கே செல்லாமல் சம்பளம் பெற்ற அரசு ஊழியர்.!


அரசு ஊழியர்கள் என்போர் உலகம் முழுக்க ஒரே மாதிரி தான் இருப்பார்களோ!

குவைத் அரசு ஊழியர்கள் பாதிக்கு மேற்பட்டோர் ஒழுங்காக வேலைக்கு வராததை தொடர்ந்து அதிரடி சோதனைகளை தொடர்ந்த அரசு ஆடிப்போயுள்ளது.

சுமார் 900 சந்தேகத்துக்குரிய அரசு ஊழியர்களின் சம்பளத்தை நிறுத்தி சோதித்த பொது ஒருவர் 10 வருடங்களாக வேலைக்கே வராமல் சம்பளம் மட்டும் பெற்று வந்துள்ளார். 


இன்னொருவர் ஒன்றரை வருடமாக வேலைக்கு வராமலும் வெளிநாட்டில் வசித்துக் கொண்டுள்ள நிலையிலும் தொடர்ந்து சம்பளம் பெற்று வந்துள்ளார். 

அவரை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்ட போது சொன்ன பதில் 'என் பாஸ் (மேனேஜர்) இதைப் பற்றி எதுவுமே கேட்கவில்லை அதனால் நானும் வரவில்லை' என சூப்பராக பதிலளித்துள்ளார்.

பொய்யான மருத்துவ விடுப்பின் மூலம் மட்டும் இதுவரை 10.5 மில்லியன் குவைத் தினார் (139.2 மில்லியன் திர்ஹம்) அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. 


கடந்த வருடம் ஜூலை மாதத்தில் மட்டும் பெருநாள் அரசு விடுமுறைக்கு முன்பாக 30,000 அரசு ஊழியர்கள் ஒட்டுமொத்தமாக மருத்துவ விடுப்பு எடுத்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

மேலும், அங்கீகரிக்கப்பட்ட 532,132 மருத்துவ விடுப்புக்கள் மூலம் மட்டும் 10,642,640 குவைத் தினார் அளவுக்கு அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து குவைத் அரசு ஊழியர்களை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கை எடுக்கவுள்ளது.

Source: Gulf News
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.