Breaking News
recent

துபாய் நிஸ்ஸான் கார்களில் ஆபத்து கால SOS சமிக்ஞை கருவிகள் பொருத்தப்படும்.!


துபையில் நடைபெற்று வரும் ஜீடெக்ஸ் டெக்னாலஜி வீக் கண்காட்சியில் பல்வேறு புதிய கருவிகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. 

அதில் ஒன்றாக வாகன விபத்து ஏற்படும் போது போலீஸ், ஆம்புலன்ஸ் போன்ற அவசர உதவிகளுக்காக தானியங்கி சமிக்ஞை அனுப்பும் SOS கருவிகள் ஆரம்பமாக நிஸ்ஸான் பேட்ரோல் (Patrol) மற்றும் மேக்ஸிமா (Maxima) வகை கார்களில் பொருத்தப்படவுள்ளதாக துபை போலீஸார் தெரிவித்துள்ளனர்.

SOS என்று அழைக்கப்படும் இந்த கருவிகளுக்கு இதுதான் விரிவாக்க அர்த்தம் என இல்லாவிட்டாலும் உலகளவில் 'Save Our Soul', 'Save Our Ship', Send Out Succour' என பொதுவாக பயன்படுத்தப்படுகின்றன. 

இந்த கருவிகள் வாகன விபத்து நேர்ந்தவுடன் 5வது நொடியில் வாகன விபத்துக்குள்ளாகியுள்ள இடம், வாகனம் சென்ற வேகம் போன்ற தகவல்களை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தானே தெரிவிக்கும் என்றாலும் வாய்ப்புள்ள நிலையில் போலீஸார் ஏற்பட்டுள்ள விபத்து சிறிய அளவிலானதா அல்லது மிக மோசமானதா என ஒட்டுனரை மொபைலில் அழைத்து விசாரிக்கவும் முயல்வர்.

குறிப்பு: ஏன் நிஸ்ஸான் கார்களுக்கு மட்டும் பொருத்தப்படுகின்றன என்பது குறித்து தகவல் இல்லை.

Source: 7 Days / Msn
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.