Breaking News
recent

துபாயில் சில்லறை கடைகளில் பொருட்களை வாங்க இனி 'நோல் கார்டுகள்.!'


துபாயில் நோல் கார்டுகள் (NOL Cards) என அழைக்கப்படும் பொது வாகன போக்குவரத்துக்கான அனுமதி சீட்டுக்களை பன்முக பயன்பாட்டிற்கும் விரிவுபடுத்தும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தற்போது மெட்ரோ நிலையங்களிலும் பெட்ரோல் பங்குகளிலும் செயல்படும் ஜூம் (ZOOM) எனும் சில்லறை விற்பனை கடைகளில் அதிகப்பட்சம் 5000 திர்ஹம் வரை பொருட்களை வாங்க பயன்படுத்தலாம். 


இந்த வசதியை இந்த வருட இறுதிக்குள் 1000 சில்லறை வர்த்தக கடைகளுக்கும், அடுத்த ஆண்டிற்குள் 10,000 சில்லறை வர்த்தக கடைகளுக்கும் விரிவுபடுத்திட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வெள்ளி மற்றும் தங்க நிற நோல் கார்டுகளில் தற்போது 1000 திர்ஹம் வரையும் நீல நிற தனிநபர் உபயோக அட்டையில் 5000 திர்ஹம் வரை மட்டுமே முன்பணம் செலுத்த முடியும் என்றாலும் விரைவில் அனைத்து அட்டைகளிலும் 5000 திர்ஹம் வரை முன்பணம் டாப்அப் செய்யும் வசதி ஏற்படுத்தப்படும் என்றும் இதன் மூலம் வாடிக்கையாளர்கள் அதிகபட்சம் 5000 திர்ஹம் வரை பொருட்களை சில்லறை கடைகளில் வாங்க முடியும் என்றும் இதனால் கையில் பணமாக கொண்டு செல்லும் பழக்கமும் பிரச்சனைகளும் (Risk) குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Source: Gulf News
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.