Breaking News
recent

துபாய் பழைய வில்லாக்களில் புதிய தீ எச்சரிக்கை கருவி பொருத்த உத்தரவு.!


துபாயில் நிகழும் தீ விபத்துக்களில் நெருப்பால் தாக்கப்பட்டு இறப்பவர்களைவிட புகையால் ஏற்படும் மூச்சுத்திணறலால் 70 சதவிகிதம் பேர் கூடுதலாக இறக்கின்றனர் என ஆய்வுகள் கூறுகின்றன.

மேலும் இத்தகைய தீ விபத்துக்களும் மூச்சுத் திணறல் பலிகளும் மக்கள் உறங்கும் போதே ஏற்படுகின்றன என்பதால் புதிய நவீன வகை புகையை ஆரம்ப நிலையிலேயே நுகர்ந்து எச்சரிக்கை ஒலி எழுப்பும் கருவிகளை (Smart Smoke Detector) புதிய கட்டிடங்களில் பொருத்தி வருகின்றனர்.

இத்தகைய நவீன கருவிகளை பழைய வில்லாக்களிலும் கட்டாயம் பொருத்த வேண்டும் என துபை தீயணைப்புத் துறை உத்தரவிட்டுள்ளது. 

இவை பழைய கருவிகளை விட அதிக சப்தம் எழுப்பக்கூடியவை என்பதுடன் 'ப்ளுடூத்' தொழில் நுட்பத்தால் ஒரே கட்டிடத்தின் பிற பகுதியிலுள்ள ஒலி எழுப்பும் கருவிகளுடனும் (Fire Alarms) இணைக்கப்பட்டிருக்கும் என்பதால் தூக்கத்தில் நிகழும் தீ மற்றும் மூச்சுத் திணறல் மரணங்கள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source: 7 Days
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.