Breaking News
recent

ஓமனில் இன்று முதல் தொலைதொடர்பு நிறுவனங்களை புறக்கணிக்கும் போராட்டம்.!


ஓமனின் முதலிரண்டு இடத்திலிருக்கும் தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களான ஓமன்டெல் (Omantel), ஓரிடோ (Ooredoo) ஆகியவற்றை தினமும் மாலை 4 மணிமுதல் மாலை 6 மணிவரை புறக்கணிக்கும் போராட்டம் தொடங்குகிறது.

எல்லாம் நம்ம ஊரு தொலைத்தொடர்பு நிறுவனங்களைப் போல தான். தரமற்ற சேவை, அதிக கட்டணம், ஆமைவேக இன்டெர்நெட் தொடர்பு மற்றும் இலவச அழைப்பு வசதிகளை மறித்தல் என தொடர்வதால் இந்த புறக்கணிப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடப்பட்ட டிவிட்டர் அழைப்பு டிரென்டிங்கில் தெறிக்கின்றதாம். மேலும் பேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூக ஊடகங்களிலும் புறக்கணிப்பு அறிவிப்புகள் பற்றி எரிகின்றன.

யாரையும் அழைக்காமலும், குறுஞ்செய்திகளை அனுப்பாமலும் வாடிக்கையாளர்களின் மொபைல்கள் அணைக்கப்பட்டு அல்லது பிளைட் மோடில் இருக்குமாறு வேண்டப்பட்டுள்ளதுடன் அந்த 2 மணிநேரத்தை உங்கள் குடும்பத்துடன் செலவு செய்யுங்கள் எனவும் அறிவுரை பறக்கிறது.

இந்தப் போராட்டம் மட்டும் ஒரு வாரம் நீடித்தாலே பல மில்லியன் ரியால்களை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இழக்க நேரிடுமாம். இத்தனைக்கும் ஓமன் அரசுக்கு சொந்தமான ஓமன்டெல் நிறுவனம் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் 6 மாதத்துடன் ஒப்பிடுகையில் 2016 ஆம் ஆண்டு முதல் 6 மாதத்தில் 9 சதவிகித வளர்ச்சியுடன் 66.8 மில்லியன் ரியால் லாபம் ஈட்டியுள்ளது. அதேகாலகட்டத்தில் அடிப்படையில் கத்தாருக்கு சொந்தமான ஓரிடோ ஓமன் நிறுவனம் 22.2 மில்லியன் ரியாலிலிருந்து 24.9 மில்லியன் ரியால்கள் என கணிசமான லாபம் பார்த்துள்ளது.

இவ்வளவு களேபரங்களுக்கு மத்தியிலும் நம்ம ஊரு மோடியை போல வாயை திறக்காத தொலைத்தொடர்பு நிறுவனங்கள் எதுவுமே தெரியாத மாதிரி கள்ள மௌன விரதத்தில் இருப்பது தான் மிகப்பெரிய ஆச்சரியம்.

Source: Gulf News
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.