Breaking News
recent

புர்கா அணிந்ததற்காக, பணிநீக்கம் செய்தது குற்றம் - சுவிஸ் நீதிமன்றம் தீர்ப்பு.!


சுவிட்சர்லாந்து நாட்டில் புர்கா அணிந்த காரணத்திற்காக பணிநீக்கம் செய்யப்பட்ட இஸ்லாமிய பெண்ணிற்கு ரூ.12 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சுவிஸில் உள்ள பேர்ன் நகரில் செர்பியா நாட்டை சேர்ந்த 29 வயதான இஸ்லாமிய பெண் பணிபுரிந்து வந்துள்ளார்.

சுமார் 6 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்த இப்பெண்ணிற்கு இவ்வாண்டு தொடக்கத்தில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இஸ்லாமியரான அவர் புர்கா அணிந்துக்கொண்டு தான் பணிபுரிந்து வந்துள்ளார். ஆனால், புர்கா அணியக்கூடாது என்றும் அது பணியை பாதிக்கும் எனக்கூறி அதனை நீக்க நிறுவனம் வலிறுத்தியுள்ளது.

நிறுவனத்தின் கோரிக்கையை பெண் நிராகரித்ததால் அவர் ஜனவரி மாதம் பணி நீக்கம் செய்யப்பட்டார்.

புர்கா அணிந்த காரணத்திற்காக தன்னை பணி நீக்கம் செய்தது மனித உரிமை மீறல் என குரல் எழுப்பிய அப்பெண் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளார்.

இவ்வழக்கு தொடர்பான இறுதி விசாரணை அண்மையில் நீதிமன்றத்திற்கு வந்தபோது நிறுவனத்தின் நடவடிக்கையை நீதிபதி கடுமையாக கண்டித்துள்ளார்.

மேலும், புர்காவிற்காக அவரை பணியில் இருந்து நீக்கியது குற்றம் எனவும், இழப்பீட்டை சேர்த்து இதுவரை அவருக்கு வழங்க வேண்டிய ஊதியமான 8,000 பிராங்க் உடனடியாக வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.