Breaking News
recent

பொருளாதாரத்தை மீண்டும் சமநிலைக்கு கொண்டுவர, சவூதி அரேபியா தீவிர முயற்சி.!


முதல் சர்வதேச பத்திர விற்பனை மூலம் செளதி அரேபியா 17 பில்லியன் டாலருக்கும் அதிகமான நிதியை திரட்டி உள்ளது.

இந்த ஆண்டு செளதி அரசாங்கம் சுமார் 90 பில்லியன் டாலர் மதிப்புள்ள பட்ஜெட் பற்றாக்குறையை கணித்துள்ளது

இந்த ஆண்டு செளதி அரசாங்கம் சுமார் 90 பில்லியன் டாலர் மதிப்புள்ள பட்ஜெட் பற்றாக்குறையை கணித்துள்ளது

எண்ணெய் மூலம் கிடைக்கும் வருவாயில் பெரும் வீழ்ச்சியை தொடர்ந்து , இந்த ஆண்டு செளதி அரசாங்கம் சுமார் 90 பில்லியன் டாலர் மதிப்புள்ள பட்ஜெட் பற்றாக்குறையை கணித்துள்ளது.

எண்ணெய் விற்பனை மூலம்தான் செளதி அரேபியாவுக்கு பெரும்பாலான வருவாய் கிடைக்கிறது.

இந்த கடன் விவகாரமானது, எண்ணெயை தவிர்த்து பொருளாதாரத்தை மீண்டும் சமநிலைக்கு கொண்டுவரும் முயற்சிகளின் ஓர் அங்கமாக பார்க்கப்படுவதாக செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஏப்ரல் மாதம், ஒரு ஆழமான தாக்கத்தை உண்டு செய்யக்கூடிய பொருளாதார சீர்திருத்தத் திட்டத்திற்கு செளதி அரேபியா அனுமதி வழங்கியிருந்தது.

சந்தையில் எண்ணெய் விலை வீழ்ச்சி காரணமாக அமல்படுத்தப்பட்ட சிக்கன நடவடிக்கையின் ஒர் அங்கமாக அரசாங்கள் ஊழியர்களுக்கு ஊதியங்கள் கடுமையாக குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

BBC
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.