Breaking News
recent

பைத்துல் முகத்தஸ் முஸ்லிம்களின் சொத்து , யூதர்களுக்கு எந்தத் தொடர்பம் இல்லை - யுனஸ்கோ பிரகடனம்.!


முஸ்லிம்களின் மூன்றாவது புனித தலமான பைத்துல் முகத்தஸ் திரு தலமும் அதன் அருகில் இருக்கும் குப்பத்து சஹ்றா பள்ளியும் முஸ்லிம்களின் தனி உரிமை என்றும் அவைகள் இஸ்லாமியர்களின் பொது சொத்து என்றும் அந்த திருதலத்திற்கும் யூதர்களுக்கும் மத அடைப்படையிலோ வரலாற்று அடிப்படையிலோ எந்த தொடர்ப்பும் இல்லை என்றும் யுனஸ்கோ நிறுவனம் 13-10-2016 அன்று பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்ற மாநாட்டில் பிரகடனம் செய்தது

யுனிஸ்கோ என்பது ஐநாவின் தலைமையில் இயங்கும் ஒரு கலாட்சார பண்பாட்டு நிறுவனமாகும் இதில் 58 நாடுகள் அங்கம் வகிகின்றன

முஸ்லிம்களின் மூன்றாவது புனிதலம் பற்றியும் அதற்கும் யூதர்களுக்கும் மத அடிப்படையிலும் வரலாற்று அடிப்படையிலும் எந்த தொடர்ப்பும் இல்லை என்ற யுனிஸ்கோவின் முடிவு உறுப்பு நாடுகளுக்கிடையே ஒட்டெடுப்பிற்கு வந்தது

இந்த தீர்மானத்தை தோற்கடிக்க இஸ்றேல் கடும் முயர்ச்சிகளை மேர்கொண்டது

இஸ்றேலின் எதிர்ப்பு முயர்ச்சிகளை முறியடித்து தீர்மானம் அமோக வெற்றி பெற்றது

58 உறுப்பு நாடுகளில் 26 நாடுகள் தீர்மானத்தில் இருந்து விலகி கொள்ள 26 நாடுகள் தீர்மானத்தை ஆதரித்தும் 6 நாடுகள் தீர்மானத்தை எதிர்த்தும் வாக்களித்தன

இதனை தொடர்ந்து பைத்துல் முகத்தஸ் திருதலத்திற்கும் யூதர்களுக்கும் மத அடைப்படையிலோ வரலாற்று அடிப்படையிலோ எந்த தொடர்ப்பும் இல்லை
என்ற தீர்மானம் வெற்றி கண்டது
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.