Breaking News
recent

குறைந்த விலையில் விமானப் பயணம் கூகுளின் புதிய வசதி.!


விமானப்பயணிகள் பயணம் செய்ய கூகிள் ப்ளைட்ஸ் என்னும் சேவையை தொடங்கியுள்ள கூகுள் நிறுவனம் தற்போது அதில் இன்னும் சில வசதிகளை மேம்படுத்தி உள்ளது.

விமானப்பயணத்தை தேர்வு செய்யும் பெரும்பாலானவர்களின் கவலை அதிக விலைதான். அதற்கு கைகொடுக்க இருக்கிறது மீண்டும் கூகுள் மெருகேற்றியுள்ள ‘கூகுள் ப்ளைட்ஸ்’ இதில் நீங்கள் பயணம் செய்யும் நாள், செல்ல வேண்டிய இடம், தேர்வு செய்யும் விமான நிறுவனம், ஆகியவற்றை மட்டும் பதிவு செய்ய வேண்டும்.
இதில் குறிப்பிட்ட விமானத்தைக் குறிப்பிடாவிட்டால் கூட பரவாயில்லை.

நீங்கள் செல்ல வேண்டிய இடத்தை, உதாரணமாக சென்னை – டெல்லி எனக் கொடுத்துவிட்டால் போதும்.

அந்தப் பயணத்தடத்தில் இருக்கும் எல்லா விமானங்களின் கட்டணங்கள், நேரங்கள் குறித்த தகவல்களை உங்கள் மின்னஞ்சல் அல்லது கூகுள் நவ் சேவையின் கார்டுகள் மூலமாக உங்களுக்கு அனுப்பிவிடும். 

மேலும் டிக்கெட் விலை, விரைவில் அதிகமாக இருக்கிறது என்றால் அதனை முன்கூட்டியே உங்களுக்கு அறிவித்துவிடும்.

இதனால் மிகக் குறைந்த விலையில் விமான சேவையை அறிந்து பயணிக்க முடியும். மேலும் இந்த சேவை விரைவில் வர விருப்பதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.