Breaking News
recent

விஜயதசமியைக் கொண்டாட துணைநிற்கும் முஸ்லிம்கள்...!


விஜயதசமி பண்டிகையின் முக்கிய நிகழ்வாக தீ வைத்து எரியூட்டப்படும் ராவணன், கும்பகர்ணன் ஆகியோரின் உருவ பொம்மைகளை உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த முஸ்லிம்கள் தயாரித்து வழங்கி வருவது மதநல்லிணக்கத்தை பறைசாற்றும் வகையில் அமைந்துள்ளது.

மதங்களின் பெயரால் பிரிவினைவாதத்தைத் தூண்ட சில அமைப்புகள் முயன்று வந்தாலும், அவற்றைக் கடந்து ஒற்றுமையுடனே இந்த தேசம் இயங்கி வருகிறது என்பதற்கு ஜம்முவில் கடந்த 35 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்தச் சம்பவம் உதாரணமாகத் திகழ்கின்றது.

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் முகமது கயாசுதீன். உருவ பொம்மைகளை வடிவமைத்துத் தருவதே இவரது பாரம்பரியத் தொழில். 40-க்கும் மேற்பட்டோர் கயாசுதீனுக்குக் கீழ் பணியாற்றுகின்றனர்.

தீமையை நன்மையை வென்றதன் அடையாளமாக, விஜயதசமியின்போது அசுர குல மன்னர்களின் உருவபொம்மையை தீ வைத்து எரிப்பது ஹிந்துக்கள் கடைப்பிடித்து வரும் சடங்குகளில் ஒன்று. அதன்படி, ராவணன், கும்பகர்ணன் ஆகியோரின் உருவபொம்மைகளை அன்றைய தினத்தில் எரியூட்டுவது வழக்கம். அதற்காக காதிதங்கள் மற்றும் மூங்கில்களைக் கொண்டு அந்த பொம்மைகளை கயாசுதீன் குழுவினர் கடந்த 35 ஆண்டுகளாக வடிவமைத்துத் தருகின்றனர்.

தாங்கள் உருவாக்கிய பொருள் தீக்கிரையாவதைக் கண்டு மகிழ்ச்சியடையும் கலைஞர்கள் நாங்களாகத்தான் இருப்போம் என்கிறார் கயாசுதீன்.

 பிற மதத்தைச் சேர்ந்தவர் என்ற பாகுபாடின்றி சகோதரத்துவத்துடனும், மரியாதையுடனும் நாங்கள் நடத்தப்படுகிறோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம்களால் தயாரிக்கப்படும் அசுர பொம்மைகள் ஜம்முவின் பூஞ்ச், ரஜெüரி, கிஸ்த்வார் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் விஜயதசமி பண்டிகையில் பயன்படுத்தப்படுகின்றன. 

இதன் மூலம் கிடைக்கும் வருமானத்தின் மூலம்தான் கயாசுதீனும், அவரது உதவியாளர்களும் தங்களது குடும்பத்தை வழிநடத்தி வருவதாகக் கூறுகின்றனர்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.