Breaking News
recent

துபாய் டிராம் பாதையில் விபத்து ஏற்படுத்தினால் கடும் தண்டனைகள்.!


துபாயின் பிரத்தியேக சாலைகளில் இயக்கப்படும் டிராம் தொடர் வண்டிகளின் (Dubai Tram) மீது வாகனத்தை மோதி விபத்து ஏற்படுத்தினால் கடும் அபராதத்துடன் தண்டனைகள் வழங்கப்படுவது ஏற்கனவே நடைமுறையில் இருந்தாலும் புதிய சட்டத் திருத்தத்தின் மூலம் அது இன்னும் கடுமையாக்கப்பட்டுள்ளது.

1. டிராம் வண்டிகளின் பாதையும் சாலை போக்குவரத்தின் பாதையும் சங்கமிக்கும் 'டிராம்வே இன்டர்செக்ஷன்'களில் (Tramway Intersections) சிவப்பு விளக்கு சிக்னலுக்கு நிற்காமல் சென்று ஏற்படும் விபத்துக்களால் மரணங்கள் சம்பவித்தால் குறைந்தபட்சம் 15,000 திர்ஹம் முதல் அதிகபட்சம் 30,000 திர்ஹம் வரை அபராதம் விதிக்கப்படுவதுடன் ஒன்றிலிருந்து அதிகபட்சம் 3 ஆண்டுகள் வரை ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும்.

2. டிராம் வண்டிகளின் பாதையும் சாலை போக்குவரத்தின் பாதையும் சங்கமிக்கும் 'டிராம்வே இன்டர்செக்ஷன்'களில் சிவப்பு விளக்கு சிக்னலுக்கு நிற்காமல் சென்று ஏற்படும் விபத்துக்களால் காயம் ஏற்படுத்தினால் குறைந்தபட்சம் 5,000 திர்ஹம் முதல் அதிகபட்சம் 15,000 திர்ஹம் வரை அபராதம் விதிக்கப்படுவதுடன் 6 மாதத்திலிருந்து அதிகபட்சம் 1 ஆண்டு வரை ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும்.

3. டிராம் வண்டிகளின் பாதையும் சாலை போக்குவரத்தின் பாதையும் சங்கமிக்கும் 'டிராம்வே இன்டர்செக்ஷன்'களில் சிவப்பு விளக்கு சிக்னலுக்கு நிற்காமல் சென்று (மரணங்கள், காயங்கள் இன்றி) ஏற்படும் விபத்துக்களுக்கு குறைந்தபட்சம் 3,000 திர்ஹம் முதல் அதிகபட்சம் 6,000 திர்ஹம் வரை அபராதம் விதிக்கப்படுவதுடன் 30 நாட்களிலிருந்து அதிகபட்சம் 6 மாதங்கள் வரை ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும்.

4. டிராம் வண்டிகளின் பாதையும் சாலை போக்குவரத்தின் பாதையும் சங்கமிக்கும் 'டிராம்வே இன்டர்செக்ஷன்'களில் சிவப்பு விளக்கு சிக்னலுக்கு நிற்காமல் (மரணங்கள், காயங்கள், விபத்துக்கள் ஏதும் நிகழாமல்) சென்றாலே குறைந்தபட்சம் 2,000 திர்ஹம் முதல் அதிகபட்சம் 5,000 திர்ஹம் வரை அபராதம் விதிக்கப்படுவதுடன் 30 தினங்களிலிருந்து அதிகபட்சம் 3 மாதங்கள் வரை ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும்.

5. மேற்காணும் புதிய திருத்தத்தின் அடிப்படையில் முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாத (சாலை கட்டுமானம் தொடர்புடைய) உரிமையாளர்கள், ஒப்பந்ததாரர்கள் மற்றும் இயந்திர இயக்குனர்களுக்கு 1 லட்சம் திர்ஹம் முதல் 5 லட்சம் திர்ஹம் வரை அபராதம் விதிக்கப்படும் மேலும் மேற்படி தண்டனையை முழுமையாக நிறைவேற்றும் வரை துபையின் சாலை போக்குவரத்து துறை அவர்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து விதமான முன் அனுமதிகள், சான்றிதழ்கள், பெர்மிட்டுகளையும் ரத்து செய்யும்.

Source: Emirates 247
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.