Breaking News
recent

துபாயில் நடைபெற்ற எதிர்கால அதிவேக போக்குவரத்திற்கான வடிவமைப்பு போட்டி.!


துபையில் சர்வதேச அளவில் நடைபெற்ற போட்டியில் பிரான்ஸ் நிறுவனம் முதலிடத்தை பிடித்தது. சர்வதேச வல்லுனர்களை நீதிபதிகளாக கொண்டு நடத்தப்பட்ட இப்போட்டியில் மொத்தம் 29 சர்வதேச நாடுகளைச் சேர்ந்த 67 நிறுவனங்கள் கலந்து கொண்டு 266 சிறந்த வடிவமைப்பு திட்டங்களை வழங்கின, இறுதி சுற்றுக்கு 6 நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட இதில் முதலாவது இடத்தை பிரான்ஸ் நிறுவனம் பெற்றது.

ஏன் இந்த போட்டி? எதிர்கால போக்குவரத்து சாதனமாக கணிக்கப்பட்டுள்ள ஹைப்பர்லூப் எனப்படும் குறைந்த காற்றழுத்த குழாய் வழியில் பயணிக்கும் வாகனம் மூலம் மணிக்கு 1200 கி.மீ வேகத்தில் செல்லலாம் அதாவது, துபையிலிருந்து 127 கி.மீ தூரத்தில் உள்ள அமைந்துள்ள புஜைரா நகரை வெறும் 10 நிமிடத்தில் அடைய முடியும்.

பயணிகள் போக்குவரத்திற்கு ஓர் தனி தடம் மற்றும் சரக்கு போக்குவரத்திற்கு ஒர் தடம் என இருவழி தடமாக போடப்பட்டு இறுதியில் ஸ்டேஷனுக்குள் ஓரிடத்தில் ஒன்று சேரும் வகையிலும் திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன.

Source: Gulf News







VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.