Breaking News
recent

அமீரகத்தில் மூடுபனி....


அமீரகத்தில் வாட்டிவதைத்த வெயில் விடைபெற்று மிதமான தட்பவெப்பம் தற்போது நிலவுகிறது. இந்நிலையில் அமீரகத்தில் இன்று வியாழன் முதல் மூடுபனி காலம் ஆரம்பமாவதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.

ஆரம்பமாக, அபுதாபி, அல் அய்ன் பகுதிகளில் ஏற்படும் மூடுபனி நாளை வெள்ளி முதல் துபையையும் தொட்டுத்தழுவும். அதேவேளை, மலைப்பிரதேசங்களின் தட்பவெப்பம் அதிகபட்சமாக 29 டிகிரி செல்ஷியஸூம் குறைந்தபட்சமாக 22 டிகிரி செல்ஷியஸூம் நிலவும்.

சுமார் 1000 மீட்டர் (1 km) தூரம் வரை கண்பார்வையை மறைக்க வல்ல இந்த மூடுபனியின் போது ஓட்டுனர்கள் மிக கவனமுடனும் மெதுவாகவும் தங்களுடைய வாகனங்களை இயக்க வேண்டும் அல்லது மூடுபனி விலகும் வரை சாலை ஓரங்களில் பார்க்கிங் விளக்குகளை ஒளிர விட்டவாறு காத்திருக்க வேண்டும்.

அதிகாலை நேரங்களில் மிக இதமான குளிர் நிலவினாலும் நகரப்பகுதிகளில் குளிர் துவங்க சுமார் 2 வாரங்கள் ஆகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

Source: Gulf News
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.