Breaking News
recent

துபாய் லிமோஸின் டேக்ஸிக்களில் இலவச வைபை வசதி துவங்கியது.!


துபாய் போக்குவரத்து துறையின் (RTA) கீழ் இயங்கும் துபை டேக்ஸி கார்ப்பரேசனுக்கு (DTC) சொந்தமான அனைத்து சொகுசு லிமோசின் டேக்ஸிக்களிலும் பயணிகளுக்கான 24 மணிநேர இலவச வைபை வசதி துவங்கியது.

ஆரம்பமாக 113 லிமொசின் டேக்ஸிக்களில் வழங்கப்படும் இந்த வைபை வசதி படிப்படியாக இதர வகை டேக்ஸிக்களுக்கும் விரிவுபடுத்தப்படவுள்ளன.

 மேலும் இந்த வைபை வசதி துபையில் மட்டுமல்லாமல் லிமொசின் பயணம் செய்யும் அபுதாபி, ஷார்ஜா போன்ற அனைத்து பக்கத்து எமிரேட்டுகளிலும் தடையின்றி செயல்படும்.

Source: 7 Days
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.