Breaking News
recent

மார்ஸ் கிரகத்தை ஆராய விண்கலம் அனுப்பும் அமீரகம்.!


சுமார் 4 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் பூமியை போல் பசுமை போர்த்திய கோளாக விளங்கியதாக விண்வெளி ஆய்வாளர்களால் நம்பப்படும் மார்ஸ் கிரகம் (செவ்வாய்) படிப்படியாக தனது சுயதன்மையை இழந்தும் வளிமண்டலத்தில் நச்சு (Toxic Atmosphere) நிறைந்தும் 'செத்த' செந்நிற பாறைகள் நிறைந்த தரிசு பாலைவனமாக மாறியுள்ளது.

இந்த நிலை ஏன் ஏற்பட்டது என்பது பற்றியும், இதுபோன்ற நிலை நாம் வாழும் பூமிக்கு ஏற்படாதிருக்க மனிதர் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் பற்றியும் ஆராயும் நோக்குடன் எதிர்வரும் 2020/2021 ஆண்டில் விண்வெளி கலம் ஒன்றை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பும் முன்மாதிரி ஆய்வுக்கல (Flight Model) வடிவமைப்பை 2019 ஆண்டிற்குள் நிறைவு செய்து பரிசோதிக்கும் திட்டங்களை அமீரகம் செயல்படுத்தி வருகிறது.

முன்மாதிரி ஆய்வுக்கல சோதனைகளை தொடர்ந்து 2020/2021 ஆண்டில் செவ்வாய் கிரகத்திற்கு விண்கலம் ஏவப்படும் என முஹமது பின் ராஷித் விண்வெளி ஆய்வு மையத்தின் 'எமிரேட்ஸ் மார்ஸ் மிஷன்' திட்ட அலுவலர் ஒமர் ஷரஃப் அவர்கள் தெரிவித்தார். 

Source: 7 Days / Msn
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.