Breaking News
recent

துபாய் மெட்ரோ பயணிகளுக்கு நற்செய்தி.!


துபாய் சாலை போக்குவரத்து தாமதங்களை குறைப்பதற்காக கொண்டு வரப்பட்ட மெட்ரோ தற்போது பரபரப்பான நேரங்களில் நின்று கொண்டு பயணம் செய்யக்கூட வழியில்லாத நிலையில் பயணிகளால் நிரம்பி வழிகிறது. 

அதாவது நம்ம நாட்டுப்புற மொழியில் சொல்வதென்றால் 'அலி ஊருக்கு பயந்து புலி ஊருக்கு போன அலி ஊரும் புலி ஊரா மாறிடுச்சாம்' என்கிற கதை தான் ஞாபகத்திற்கு வருகிறது.

பரபரப்பான காலை மற்றும் மாலை நேரங்களில் (Peak Hours), குறிப்பாக காலையில் வேலைக்கு செல்லும் நேரத்திலும் பின்பு மாலையில் வீடு திரும்பும் நேரத்திலும் பயணிகளின் சிரமத்தை குறைப்பதற்காக 276 கூடுதல் குறுகிய தூர பயணங்களுக்கான சேவைகள் (Cut Route Services) இன்று (ஞாயிறு 23.10.2016) முதல் துவங்குகின்றன.

ரெட் லைனில் துபை இன்டர்நெட் சிட்டி (Internet City) மற்றும் ஜாஃபிலியா (Jaffiliya) நிலையங்களிலிருந்து ராஷிதியாவிற்கும் (Rashidiya)  மற்றும் பர்ஜூமானிலிருந்து (Bur Juman) ஜெபல் அலிக்கும் (Jabal Ali) இடையில் வாரத்தில் 5 நாட்கள் அதாவது ஞாயிறு முதல் வியாழன் வரை இச்சிறப்பு கூடுதல் மெட்ரோ ரயில்கள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Source: 7 Days
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.