Breaking News
recent

அமீரகத்தில் இந்திய பாஸ்போர்ட் சேவை நிறுவன ஓப்பந்தப்புள்ளி கோரல் மேலும் தாமதம்.!


அமீரகத்தில் இந்தியர்களின் பாஸ்போர்ட் புதுப்பித்தல், விசா விண்ணப்பங்கள் பெறுதல் போன்ற பல்வேறு சேவைகளை முன்பு இந்திய தூதரகமே நேரிடையாக வழங்கி வந்தது. 

தினமும் கட்டுக்கடங்காத கூட்டம் தூதரகத்தில் கூடியதை தொடர்ந்து இந்த சேவைகள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு எம்போஸ்ட் போன்ற நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

கடந்த 3 வருடங்களாக இந்த சேவையை வழங்கி வந்த BLS இன்டர்நேஷனல் என்ற நிறுவனத்தின் ஒப்பந்த காலமும் கடந்த வருடத்துடன் நிறைவடைந்தாலும் இந்த வருட ஆகஸ்ட் மாதம் வரை நீட்டிக்கப்பட்டது. 

இது தற்போது இரண்டாவது முறையாக 2017 ஜனவரி மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது, காரணம் புதிய ஒப்பந்தப்புள்ளி கோரலுக்கான பணிகள் இதுவரை நிறைவடையவில்லையாம். 

விரைவில் அதற்கான பணிகள் துவங்கவுள்ளதால் பாஸ்போர்ட், விசா சேவைகளில் எத்தகைய பின்னடைவும் ஏற்படாது என தூதரக அதிகாரி நீதா பூஷன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

மேலும் கடந்த ஜூன் மாதம் முதல் இந்திய பாஸ்போர்ட்கள் 40 வேலைநாட்களுக்கு பதிலாக 5 வேலைநாட்களில் புதுப்பித்து தரப்படுகின்றன ஆனால் அவற்றுக்கான ஆவணங்கள் அனைத்தும் சரியாக இருக்க வேண்டும். 

முன்புபோல் அல்லாமல் இந்தியாவிலோ அல்லது வெளிநாட்டிலோ எங்கிருந்து விநியோகிக்கப்பட்ட பாஸ்போர்ட்டையும் தற்போது அபுதாபியிலோ அல்லது துபையிலோ புதுப்பித்துக் கொள்ளலாம்.

பொதுவாக, புதுப்பிக்க விண்ணப்பிக்கபடும் பாஸ்போர்ட்களுக்கு மறு போலீஸ் விசாரணை அறிக்கை தேவையில்லை என்றாலும் குற்றப் பட்டியலில் உள்ளவர்களுக்கு மட்டும் மறு போலீஸ் விசாரணை அறிக்கை வரும் வரை பாஸ்போர்ட் புதுப்பித்தல் தாமதமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: Gulf News
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.