Breaking News
recent

சவுதியில் தொழிலாளர்களுக்கான சிறப்பு நீதிமன்றங்கள் அமைப்பு.!


சவுதியில் நீண்டகாலமாக எதிர்பாக்கப்பட்ட தொழிலாளர்களின் நலன்களுக்காக சிறப்பு தனி நீதிமன்றங்கள் இந்த வருட இறுதிக்குள் ஜெத்தா, ரியாத், தம்மாம், மக்கா மற்றும் மதினா ஆகிய இடங்களில் அமையவுள்ளதாக நீதித்துறை அமைச்சர் வலீத் அல் சமானி அவர்கள் தெரிவித்துள்ளார்.

இதுவரை ஜூடிசியல் கவுன்சில் நீதிமன்றங்களே தொழிலாளர் சம்பந்தப்பட்ட விவகாரங்களை கையாண்டு வந்த நிலையில் இனி தனி நீதிமன்ற நீதிபதிகள் வழக்குகளை விசாரிப்பார்கள். 

இதற்காக சுமார் 99 துணை நிலை நீதிபதிகள் தேர்வு செய்யப்பட்டு தொழிலாளர்களுக்கான வழக்குகளை கையாளுவதற்கான சிறப்பு பயிற்சிகளை பெற்று வருகின்றனர்.

இவர்களிலிருந்து 80 நீதிபதிகள் உடனடியாக இந்த நீதிமன்றங்களில் பொறுப்பேற்கவுள்ளனர்.

Source: Arab News
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.