Breaking News
recent

ரேஷன் கடைகளில் நடக்கும் முறைகேடுகளை இனி பேஸ்புக் -டுவிட்டரில் தெரிவிக்கலாம்.!


தமிழக அரசு உணவுப்பொருட்களுக்காக, ரேஷன் கடைகளுக்கு அரிசி, கோதுமை, சர்க்கரை, போன்றவைகளுக்காக ஆண்டுக்கு 5000 ஆயிரம் கோடிக்கு மேல் செலவு செய்கிறது.

ரேஷன் கார்டு வைத்திருக்கும் பலபேர் தங்களின் கார்டுகளை வெளியாட்களுக்கு கொடுத்து விடுகின்றனர். 

இதனால் ஊழியர்கள் கள்ளச்சந்தையில் உவு பொருட்களை விற்பனை செய்து விடுகிறார்கள்.

சில இடங்களில் உணவுப்பொருட்களில் கலப்படம் செய்யப்படுவதாக புகார்கள் வருகின்றன. 

தமிழகத்தில் உள்ள பெரும்பாலான ரேஷன் கடைகளில் பல முறைகேடுகள் நடந்துகொண்டு இருக்கின்றன. இவற்றை தடுக்க அதிகாரிகள் புகார் எண்கள் அறிவித்தனர். 

ஆனால் பெரும்பாலான மக்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லாததால் புகார் எண்களை பயன்படுத்துவதில்லை.

தற்போது காலங்கள் மாறிக்கொண்டே வருகின்றன. இன்றைய இளைய சமுதாயம், மற்றும் பெரியவர்கள் வரை எளிதில் பயன்படுத்தக்கூடியவை சமூக வளைத்தளங்கள். ஆகையால் தற்போது காலத்துக்கு ஏற்ப புதிய முயற்சியை அரசு கையாண்டு வருகிறது.

சமூக வலைதளங்களில் இனி ரேஷன் கடைகளில் நடக்கும் முறைகேடுகளை மக்கள் தங்களின் மொபைலில் போட்டோ, அல்லது வீடியோவாக எடுத்து பேஸ்புக் பக்கத்திலோ அல்லது டுவிட்டர் பக்கத்திலோ பதிவிட்டு புகார்களை உடனடியாக தெரிவிக்கலாம்.

புகார் தெரிவிக்க டி.என்.இ.பி.டி.எஸ்., என்ற முகவரியில் தெரிவிக்கலாம். இந்த வசதியை உணவுத்துறை ஏற்படுத்தியுள்ளது.

 ரேஷன் வினியோகத்தை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களையும் கூறலாம். 

ரேஷன் பொருட்கள் தரமற்று இருந்தால், புகைப்படம் எடுத்து வெளியிடலாம். இதன் மூலம், ஒரு இடத்தில் நடக்கும் தவறு, மற்ற இடங்களுக்கு தெரிய வரும் என்பதால், முறைகேடுகள் குறையும். என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.