Breaking News
recent

நடுவழியில் கணவரை பறிகொடுத்தவருக்கு உதவிய ஜித்தா தமிழர்கள்.!


கனடாவிலிருந்து சென்னைக்கு சென்ற தமிழக பயணி சவூதி அரேபியாஜித்தா விமான நிலையத்தில் மரணமடைந்ததை அடுத்து அவரது மனைவிக்கு ஜித்தா தமிழ் சங்க நிர்வாகிகள் உதவி புரிந்தானர்.

கடந்த செப்டம்பர் 18 ஆம் தேதி கனடாவில் இருந்து சென்னைக்கு மனைவியுடன் திரும்பும் வழியில் பாலசந்திரன் (72) என்னும் தமிழர் சவூதி அரேபியா ஜெத்தா விமான நிலையத்தில் சென்னை விமானத்திற்காக காத்திருக்கும்போது திடீர் மாரடைப்பால் மரணமடைந்தார்.

இறந்த கணவரின் உடலுடன் மன்னர் பஹாத் மருத்துவமனையில் பரிதவித்த அவரது மனைவி சாந்தகுமாரியை (70) திரு ஜெரால்டு கொடுத்த தகவலின் அடிப்படையில் ஜெத்தா தமிழ் நண்பரகள் பாலச்சந்திரன் மனவி சாந்தகுமாரியை சந்தித்து ஆறுதல் கூறினர்.

மேலும் அவர் தங்குவதற்கு இடவசதியும் அவருக்குத் தேவையான மருத்துவ வசதியும் செய்து கொடுத்தனர். இந்த நிலையில் செப்டம்பர் 21 ஆம் தேதி இந்தியத் தூதரக உதவியுடன் சாந்தகுமாரி மட்டும் சென்னை திரும்பினார். 

முன்னதாக அவருக்கு தமிழகத்தைச் சேர்ந்த சலாஹுவுதீன் என்பவர் தனது இல்லத்தில் அடைக்கலமும் சிறப்பு சைவ உணவும் அளித்து உபசரித்தார்.. 

மேலும் சாந்தகுமரிக்கு ஜெய்சங்கர், இராதாகிருஷ்ணன், இராம்குமார், ராஃபியா, சிராஜ் உள்ளிட்ட ஜித்தா தமிழ் சங்க நிர்வாகிகள் தினமும் தனது குடும்பத்தினருடன் சென்று அவருக்கு மருந்துபொருட்கள் வாங்கி கொடுத்த மற்றும் உறுதுணையாய் இருந்தனர்.

இதற்கிடையே பாலச்சந்திரன் உடல் சவுதி அரசாங்க கட்டுப்பாட்டில் இருந்து முறைப்படி அக்டோபர் 11 ஆம் தேதி சென்னைக்கு அனுப்பி வைக்கப் பட்டது.

இதற்கு முழுமுயற்சியும் எடுத்வர்கள் சலாவுதீன், மொகமது முனாப் உள்ளிட்ட தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். 

சென்னைக்கு கொண்டுவரப்பட்ட பாலச்சந்திரன் உடல் அக்டோபர் 12 ஆம் தேதி  நல்லடக்கம் செய்யப்பட்டது
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.