Breaking News
recent

சவூதியில் ஒட்டிப்பிறந்த குழந்தைகள் வெற்றிகரமாக பிரித்தெடுக்கப்பட்டனர்.!


நெஞ்சும் வயிற்றுப் பகுதியும் ஒட்டிய நிலையில் பிறந்த இரட்டை பெண் குழந்தைகள் சவுதி அரேபியா ரியாத் நகரின் கிங் அப்துல் அஜீஸ் மெடிக்கல் சிட்டியினுள் அமைந்துள்ள கிங் அப்துல்லா குழந்தைகள் நல சிறப்பு மருத்துவமனையில் டாக்டர் அப்துல்லாஹ் அல் ரபீயா அவர்கள் தலைமையிலான குழுவினரால் வெற்றிகரமாக பிரித்தெடுக்கப்பட்டனர்.

இவர்கள் 34 வார குறை பிரசவத்தில் 3.6 கிலோ எடையுடன் சிசேரியன் மூலம் பிறந்த பச்சிளம் பாலகர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சுமார் 5 மணி நேரத்தில் பிரித்தெடுக்கப்பட்ட இந்நிகழ்வின் போது 'ஐலான்' என்ற குழந்தை 80 சதவிகிதம் உயிர் பிழைப்பது கடினம் என்ற நிலையில் இருந்ததும் 'ஐலீன்' என்ற குழந்தை மட்டுமே அறுவை சிகிச்சைக்குப் பின் உயிர் பிழைக்கும் என்ற நிலை இருந்தது குறிப்பிடத்தக்கது.

சவுதியில் 1990 ஆம் ஆண்டு முதல் இதுவரை 41 ஒட்டிப் பிறந்த 18 சர்வதேச நாட்டு குழந்தைகளையும் பிரித்தெடுக்கும் ஆபரேசன்கள் நடந்துள்ளன, இதில் 32 ஆபரேசன்கள் வெற்றியடைந்துள்ளன. 

94 குழந்தைகளுக்கு ஆபரேசன் இல்லாத மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளன. மேலும் குழந்தைகளை பிரித்தெடுப்பதற்கு ஆகும் மொத்த செலவுகளையும் சவுதி மன்னர்களின் உத்தரவின் பேரில் சவுதி அரசே ஏற்றுக் கொள்கிறது.

Source: Arab News
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.