Breaking News
recent

மிக அதிகமாக தண்ணீர் குடித்தால் உயிருக்கு ஆபத்து: புதிய ஆய்வில் தகவல்.!


நல்ல உடல் நலத்துக்கு தினமும் 8 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும்’ என முந்தைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

ஆனால் மிக அதிக அளவு தண்ணீர் குடிப்பது உயிருக்கு ஆபத்து. எனவே ‘அளவோடு தண்ணீர் குடித்து வளமோடு வாழுங்கள்’ என்று புதிய ஆய்வு தெரிவிக்கிறது.

ஆஸ்திரேலியாவின் மோனாஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த நிபுணர்கள் இது குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

அதில், அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடிக்கும் போது தேவைக்கு மிஞ்சிய நீரை மூளை தடுத்து நிறுத்துகிறது.

இதனால் அந்த தண்ணீரை மற்ற உடல் உறுப்புகள் மிக கடுமையாக ஏற்றுக்கொள்ளக் கூடிய சூழ்நிலை உருவாகிறது. 

தண்ணீரில் உள்ள சோடியத்தின் அளவு ரத்தத்தில் குறைந்து உடல் தனது நிலையை இழக்கச் செய்கிறது.

இதனால் குமட்டல் மற்றும் நினைவிழக்க செய்தல் நிலை உருவாகி ‘கோமா’ நிலைக்கு செல்லும் ஆபத்தும் உருவாகிறது. இதுவே உயிரை பறிக்க கூடிய சூழ்நிலையையும் ஏற்படுத்துகிறது.

எனவே போதுமான அளவு மட்டும் தண்ணீர் குடித்து நிறைவாக வாழும்படி ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.