Breaking News
recent

சர்வதேச நாணய நிதியம் ஆச்சரியத்தில்.. வீழ்ச்சி அடைந்த சவுதி அரேபியாவின் பொருளாதாரம் குறுகிய காலத்தினுள் மீள் எழுச்சி.!


உலக சந்தையில்  கச்சா எண்ணெய் விலை சரிவால் கடும் நெருக்கடியை சந்தித்த சவுதி அரேபியாவின் பொருளாதாரம் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு பிறகு வளர்ச்சி பாதையில் செல்வதாக சர்வதேச நிதியமான ஐ.எம்.எப். தெரிவித்துள்ளது. 

உலக சந்தையில்  கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் 2-வது இடத்தில் இருந்த சவுதி அரேபியா கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளது. 

இதனை சமாளிக்க கடந்த வாரம் சர்வதேச அளவில் 17.5 மில்லியன் டாலர் தொகைக்கான சர்வதேச பத்திரங்களை அந்நாட்டு அரசு வெளியிட்டது. 

இந்நிலையில் சவுதி அரேபியாவின் பொருளாதாரம் 1.2 சதவீதம் உயர்ந்துள்ளதாக சர்வதேச நிதியம் தெரிவித்துள்ளது. 

அடுத்த ஆண்டு இறுதிக்குள் பொருளாதார வளர்ச்சி 2 சதவீதமாக உயரும் என்று அந்நாட்டு நிதி அமைச்சர் இப்ராஹிம் அல் ஹசப் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

சவுதி அரேபியாவில் கச்சா எண்ணெய் ஏற்றுமதியின் மூலம் கிடைக்கும் வருமானம் நாட்டின் மொத்த வருமானத்தின் 75 சதவீதமாகும்.

 நடப்பாண்டில் 6.35 லட்சம் கோடி ரூபாய் பட்ஜெட் பற்றாக்குறை ஏற்பட்டதால் அரசு ஊழியர்களின் சம்பளம் குறைப்பு உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. 
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.