Breaking News
recent

மிஸ்டு கால் கொடுங்க… பேங்க் பேலன்ஸை தெரிஞ்சுக்கங்க.!


உங்களுடைய வங்கிக் கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது என்பதை அறிய, இனி நீங்கள் ஒரு மிஸ்டு கால் கொடுத்தால் போதும். உங்கள் வங்கிக் கணக்கில் எவ்வளவு பேலன்ஸ் இருக்கிறது என்கிற விவரம் உங்கள் போனுக்கு எஸ்எம்எஸ்-ஆக வந்துவிடும்.

இந்த வசதியினை கிட்டத்தட்ட அனைத்து வங்கிகளும் ஏற்படுத்தி இருக்கின்றன. இந்த மிஸ்டு கால் சேவையில் இணைய இணைப்பு தேவையில்லை. வங்கிக்கும், ஏடிஎம்–க்கும் செல்ல வேண்டிய அவசியமும் இல்லை.

ஒவ்வொரு வங்கிக்கு என்று தனியே வழங்கப்பட்டு இருக்கும் மொபைல் எண்ணுக்கு, நீங்கள் வங்கியில் பதிவு செய்துள்ள நம்பரிலிருந்து மிஸ்டு கால் தந்தாலே  வங்கிக் கணக்கில் எவ்வளவு தொகை இருக்கிறது என்ற விவரம் வந்துவிடும்.

சில வங்கிகளில் பேலன்ஸ் தொகையுடன் மினி ஸ்டேட் மென்ட் விவரங்களும் எஸ்எம்எஸ் மூலம் கிடைக்கின் றன. 

சில வங்கிகள் பேலன்ஸ் தொகையினை தெரிந்து கொள்ள தனி எண்ணும், மினி ஸ்டேட்மென்ட்டை தெரிந்து கொள்ள தனி எண்ணும் வைத்திருக்கின்றன.

இதற்கு வங்கிக் கணக்குடன் உங்களது மொபைல் எண்ணை இணைத்திருக்கவேண்டும். ஏற்கெனவே இணைத்திருந்தால் உடனே உங்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் தகவல் வந்துவிடும்.

எஸ்எம்எஸ் தகவல் கிடைக்காத பட்சத்தில் உங் களது வங்கிக் கிளையினை அணுகி, உங்களது வங்கிக் கணக்குடன் மொபைல்  எண்ணை, இணைப்புக்கு என உள்ள விண்ணப்பத்தினைப் பெற்று பூர்த்தி செய்து தரவேண்டியிருக்கும். 

இவ்வாறு மிஸ்டு கால் தரும்போது, உங்கள் மொபைல் போனில் இரண்டு, மூன்று வினாடிக்கான கட்டணத்தை செலுத்த வேண்டியிருக்கும். 

சில வங்கிகள் கட்டணமில்லா (டோல்ஃப்ரீ) தொலைபேசி எண்களை வழங்கி இருக்கின்றன.

மிஸ்டு கால் மூலம் பேங்க் பேலன்ஸ் தெரிந்துக் கொள்ள தற்போது வங்கிகள் சேவைக் கட்டணம் பெறுவதில்லை. 

இலவசமாகதான் வழங்கி வருகின்றன. இந்த இலவச சேவையை நீங்களும் பயன்படுத்திக்கொள்ளலாமே!


VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.