Breaking News
recent

மக்கா, மதீனா மஸ்ஜிதுகளில் உடனுக்குடன் மொழியாக்கம் செய்யும் ஆன்டெனாக்களை உருவாக்கி சாதனைப் படைத்துள்ள தமிழர்.!


மக்காவிற்கு உம்ராவுக்குச் சென்ற ஒரு தமிழரின் உண்மையான கவலையின் விளைவு, இன்று இரண்டு பள்ளிகளிலும் செய்யப் படும் உரைகள் 38 மொழிகளில் உடனுக்குடன் மொழியாக்கம் செய்யப்படுகின்றது.

நாகர் கோவில் வாசியான சலாஹுதீன் அமெரிக்காவில் NAZTEC என்ற நிறுவனத்தின் அதிபராகவும், சிறந்த கண்டுபிடிப்பாளராகவும் உள்ளார். 

அமெரிக்காவில் வோட்டுப் போடும் இயந்திரமும் மற்றும் புயல் சூறாவளி முன்னெச்சரிக்கை ஆன்ட்டனாக்களும் இவரின் கம்பெனி சார்பாக நிறுவி வருகின்றனர். 

பழகுவதற்ற்கு மிகவும் இனிமையாகவும், மிக மிக எளிமையாகவும் செயல்படும் இளைஞ்சர்.

ஒரு முறை உம்ராவிற்கு சென்றபோது, மக்காவிற்குச் செல்லக் கூடிய மக்களில் 70% அதிகமானோர் அரபு மொழி அறியாதவர்களே. 

அங்கே செய்யப்படும் பிரசங்கத்தை எப்படி மக்கள் புரிந்து கொள்வது என்பதை பற்றிய இவரின் ஆராய்ச்சி இதற்கான சிறப்பு ஆன்டெனாக்களை கண்டுபிடிக்கத் தூண்டியது.

சவூதி அரசின் கோரிக்கை எதுவுமில்லாமல் தன்னுடைய அனைத்துத் திறமைகளையும் பயன்படுத்தி இவருடைய தலைமையிலான ஒரு குழு மூன்று வருடங்கள் கடுமையாக உழைத்து இந்த ஆன்டெனாக்களைக் கண்டுபிடித்து உள்ளனர்.

தன்னுடைய கண்டுபிடிப்பை தான் அறிந்த பல சவூதி மக்களின் மூலம் 4 வருடங்கள் தொடர்ந்தது முயற்சி செய்தும், அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல முடியவில்லை. 

இறுதியாக, அல்லாஹ்வின் நாட்டப்படி 2014ம் ஆண்டு, ஹரமின் நிர்வாகிகளில் ஒருவரைச் சந்த்தித்ததன் மூலம் பலன் கிடைத்தது.

இதற்காகவே தனி டிபார்ட்மென்ட் உருவாக்கப்பட்டு வேலைகள் துரிதமாக நடக்கத் தொடங்கியது. 

அமெரிக்காவிலிருந்து தனி விமானத்தில் இதற்குத் தேவையான பொருட்கள் அனைத்தும் கொண்டுவரப்பட்டு, இறுதியில் மக்கா, மதீனாவில் செயல் பட தொடங்கியுள்ளன.

ஒரு தனி மனிதனின் உண்மையான கவலையை அல்லாஹ் பொருந்திக் கொண்டதன் விளைவு பல்லாயிரக்க கணக்கான மக்களுக்கு மிகுந்த பலனை கொடுக்கத் தொடங்கியுள்ளது.

இதற்க்கு மூல காரணம் ஒரு தமிழ் முஸ்லீம் என்பதில் மிகவும் பெருமை கொள்கின்றோம். இவர்க்கு பல வகையிலும் உற்றத் துணையாக இருக்கும் இவரின் மனைவியும் ஒரு தமிழ் சகோதரியே.

இவர்களை இறைவன் பொருந்திக் கொண்டு, இன்னும் பல சாதனைகள் புரிய பிரார்த்திக்கின்றோம். இந்த காணொளியில் மொழியாக்க கருவியின் செயல்பாட்டைக் காணலாம்.

தற்போது மதீனாவில் இருக்கும் சகோ. சலாஹுதீன் அவர்களிடம் தமிழ் மொழியாக்கம் எப்போது வரும் என்று கேட்டதற்கு, இன்னும் ஆறு மாதங்களில் கிடைத்து விடும் என்று அறிவித்துள்ளார்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.