Breaking News
recent

எச்சரிக்கை!! தூங்கி எழுந்தவுடன் தேநீர் குடிப்பவர்களா நீங்கள்? தவிர்ந்து கொள்ளுங்கள்!!


இன்றைய காலகட்டத்தில் அனைவரும் தூங்கி எழுந்தவுடன் தேநீர் அல்லது காபியில் தான் விழிப்பார்கள். 

இதுபோன்ற பழக்கத்தை தவிர்த்து, காலை தூங்கி எழுந்ததும் தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை உண்டாக்கி கொள்ளுங்கள். 

இது உடலில் நிகழ்த்தும் ஆரோக்கிய அற்புதங்களை அறிந்தால், நீங்கள் இந்த பழக்கத்தை ஒருபோதும் கைவிட மாட்டீர்கள் என புதிய ஆய்வுகளில் அறியவந்துள்ளது. 

ஒரு பெரிய டம்ளரில் 300 மி.லி அளவிலான நீர் நீங்கள் எழுந்தவுடன் பருகுவதால் உங்கள் சிறுநீர்கள் அற்புதமான அளவில் நச்சுக்களை வடிக்கட்ட ஆரம்பிக்கும்.

 இரத்தத்தில் உள்ள நச்சுக்களை போக்கும். உடலில் தேவையின்றி தேங்கியிருக்கும் கெமிக்கல்களை நீக்க இது உதவும். ஒட்டுமொத்த உடல் செயல்திறனை ஊக்குவிக்கும்.

காலையில் வெறும் வயிற்றில் நீர் குடிப்பதால் உங்கள் பசி குறையும். இதனால், உடல் பருமன் அதிகரிப்பதை குறைக்க முடியும். 

கலோரிகள் குறைவாக எடுத்துக் கொள்வதால் உடலில் கொழுப்பு செல்கள் தேங்குவதை குறிக்க முடியும் என ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நமது உடலில் படர்ந்து பெரிதாய் இடம் பெற்றிருக்கும் உடல் உறுப்பு சருமம் தான். இதை ஆரோக்கியமாக வைத்துகொள்ள நீங்கள் சீரான அளவில் நீர் உட்கொள்ள வேண்டியது அவசியம். 

இதை சரியாக பின்பற்றுவதால் சருமத்தில் அதிக சுருக்கம், வறட்சி உண்டாகாமல் பார்த்துக் கொள்ள முடியும்.

ஒருநாள் நீங்கள் சரியாக நீர் குடிக்காமல் இருந்தாலும், குடல் இயக்க செயற்பாட்டில் தாக்கங்கள் உண்டாகும். இதனால் மலம் கழிப்பதில் பிரச்சனைகள் உன்டாகும். 

காலை எழுந்ததும் நீர் குடிப்பதால் மலம் கழிப்பதில் பிரச்சனை ஏற்படாமல் பார்த்துக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.