Breaking News
recent

சீனாவின் சிறையில் ஆயுள் தண்டனையாக கைதியாகவுள்ள, முஸ்லிம் சகோதரருக்கு உயர் விருது.!


சீனச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள உய்கர் இன இஸ்லாத்தைச் சேர்ந்த பேராசிரியர் இல்ஹாம் தோதிக்கு, மனித உரிமைகளுக்கான சர்வதேச "மார்ட்டின் என்னல்ஸ்' விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆம்னஸ்டி இன்டர்நேஷனல், மனித உரிமைகள் கண்காணிப்புக் குழு உள்ளிட்ட 8 சர்வதேதச மனித உரிமைகள் அமைப்புகள் இணைந்து வழங்கும் இந்த விருதுக்கு இல்ஹாம் தோதி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது, அவருக்கு வழங்கப்பட்ட சர்ச்சைக்குரிய ஆயுள் தண்டனை குறித்து உலகின் கவனத்தை மீண்டும் திருப்பியுள்ளது என்று கூறப்படுகிறது.

46 வயதாகும் இல்ஹாம் தோதி, பெய்ஜிங்கிலுள்ள மின்ஸý பல்கலைக்கழகத்தில் பொருளாதார விரிவுரையாளராகப் பணியாற்றி வந்தார். சிறுபான்மை உய்கர் இன முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த இவர், துருக்கிய முஸ்லிம் உய்கர் அமைப்பில் உறுப்பினராக இருந்தார். ஜின்ஜியாங் மாகாணத்தில் சீன அரசு கடைப்பிடித்து வரும் அடக்குமுறைகளை இல்ஹாம் தோதி வெளிப்படையாக விமர்சித்து வந்தார்.

இந்தச் சூழலில், அவர் மீது கடந்த 2014-ஆம் ஆண்டு பயங்கரவாதக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, இரண்டு நாள் வழக்கு விசாரணைக்குப் பிறகு அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதற்கு சர்வதேச அளவில் கடும் கண்டனம் எழுந்தது. இந்த நிலையில், நிகழாண்டுக்கான "மார்ட்டின் என்னல்ஸ்' விருதுக்கு இல்ஹாம் தோதி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.