Breaking News
recent

கத்தார் நாட்டு டிரான்ஸிட் அனுமதி இப்ப ரொம்ப ஈஸி.!


கத்தார் நாட்டின் சுற்றுலாத்துறை, உள்துறை அமைச்சகம் மற்றும் கத்தார் ஏர்வேஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இனி குறைந்தபட்சம் 5 மணிநேர பயண இடைவெளியிலிருந்து அதிகபட்சம் 96 மணிநேர இடைவெளி நேரம் வரை (4 நாட்கள்) 'அல் ஹமாத் சர்வதேச விமான நிலையம்' வழியாக செல்லும் அனைத்து நாட்டு பயணிகளும் (விசா தேவையில்லாத) இலவச டிரான்ஸிட் அனுமதியில் கத்தார் நாட்டின் உள்ளே சென்று திரும்பலாம் ஆனால் திரும்பிச் செல்லும் உறுதி செய்யப்பட்ட டிக்கெட் மற்றும் பாஸ்போர்ட் கட்டுப்பாட்டு நடைமுறைகளை பேணுதல் அவசியம்,

இதற்கு முன், 8 மணிநேரத்திலிருந்து 48 மணிநேர (2 நாள்) பயண இடைவெளி உள்ளவர்களுக்கு மட்டுமே விமான நிலையத்திலிருந்து இலவச டிரான்ஸிட் விசா வழங்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

டிரான்ஸிட் விசாக்களுக்காக விண்ணப்பிக்க வேண்டியதில்லை என்ற இந்த புதிய நடைமுறை அனைத்து சர்வதேச பயணிகளும் கத்தார் நாட்டிற்குள் விஜயம் செய்வதையும், சுற்றுலா சார்ந்த நடவடிக்கைகளையும் மேலும் ஊக்குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source: 7 Days
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.