Breaking News
recent

கட்டண உயர்வு எதிரொலி: மக்காவிற்கு யாத்திரை செல்பவர்கள் எண்ணிக்கை குறைவு.!


உம்ரா யாத்திரை கட்டணம் உயர்த்தப்பட்டதை அடுத்து இந்தியாவிலிருந்து மக்காவிற்கு உம்ரா பயணம் மேற்கொள்பவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சவூதி அரேபியா மக்காவிற்கு உம்ரா பயணம் மேற்கொள்பவர்கள் முதல் தடவை என்றால் கட்டணம் இல்லை. அதேவேளை ஒன்றுக்கு மேல் உம்ரா யாத்திரை மேற்கொள்பவர்கள் 15 நாட்கள் உம்ரா விசாவிற்கு 2000 சவூதி ரியால் கட்டணமாக செலுத்த வேண்டும்.
இந்த புதிய விதிமுறை கடந்த மாதம் அமுலுக்கு வந்தது. தற்போது உம்ரா சீசன் தொடங்கியுள்ள நிலையில் புதிய விதிமுறையின்படி கட்டணம் இரட்டிப்பாகியுள்ளதால் இந்தியாவிலிருந்து உம்ரா பயணம் மேற்கொள்பவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக ட்ராவல் ஏஜென்ஸி நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.
முதல்தடவை உம்ரா பயணம் மேற்கொள்பவர்களுக்கு இந்த புதிய கட்டண முறை பின்பற்றப் பட மாட்டாது.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.