Breaking News
recent

சபரிமலை கோவிலுக்கு சென்ற முதல் கேரள முஸ்லிம் மந்திரி.!


பிரசித்திப்பெற்ற சபரிமலை சுவாமி அய்யப்பன் கோவிலில் நடைபெறும் முக்கிய பூஜைகளில் மண்டல பூஜையும் ஒன்று. இந்த ஆண்டுக்கான மண்டல பூஜைக்காக வருகிற 16-ந்தேதி மாலை 5 மணிக்கு சபரிமலை கோவில் நடை திறக்கப்படுகிறது.

மறுநாளில் இருந்து சுவாமி அய்யப்பனுக்கு மண்டல பூஜை நடைபெறும். இதில் தமிழகம், ஆந்திரா, கர்நாடகம் உள்பட வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்துகொள்வார்கள்.

மண்டல பூஜையையொட்டி சபரிமலையில் பக்தர்கள் வசதிக்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சாலை, மின்விளக்கு, மருத்துவ வசதி உள்பட அடிப்படை வசதிகள் நிறைவுபெற்றுள்ளது. பக்தர்களின் வாகனங்களை நிறுத்தவும் அவசரகால மீட்புபணிக்காக நிலக்கல்லில் ஹெலிகாப்டர் தளம் அமைப்பு போன்றவையும் செய்து முடிக்கப்பட்டுள்ளது.

இந்த பணிகளை ஆய்வு செய்ய கேரள தேவசம் போர்டு மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன், உள்ளாட்சித்துறை மந்திரி ஜெலில் ஆகியோர் சபரி மலைக்கு சென்றனர். அவர்கள் தேவசம்போர்டு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்கள்.

மேலும் பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகளை அவர்கள் நேரில் பார்வையிட்டனர்.

கேரளாவில் மந்திரி பொறுப்பில் இருக்கும் முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த ஒருவர் சபரிமலைக்கு சென்றது இதுவே முதல் முறை ஆகும்.

சபரிமலையில் உள்ள ‘வாவர் நடை’ என்ற பகுதிக்கும் மந்திரி ஜெலில் சென்றிருந்தார். ‘வாவர்’ என்பவர் முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர். இவர் சுவாமி அய்யப்பனின் போராளியாக, நண்பராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சபரிமலைக்கு சென்று வந்தது பற்றி மந்திரி ஜெலில் தனது பேஸ்புக்கில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் சபரிமலைக்கு மலையேறி சென்ற நான் இரவு அங்கேயே தங்கினேன். 


காலையில் அய்யப்பன் சன்னதிக்கு சென்றேன். அங்கு மதரீதியாக யாருக்கும் எந்த தடையும் இல்லை. ‘வாவர் நடைக்கும்’ சென்று பார்த்தேன். அய்யப்பன் - வாவரின் நட்பு பல நூற்றாண்டுகளாக இன்றும் தொடர்கிறது. இந்த மத ஒற்றுமை தொடரவேண்டும் என்று கூறி உள்ளார்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.