Breaking News
recent

கத்தார் நாட்டு தொழிலாளர் நல சட்டங்களில் வரவேற்கத்தக்க திருத்தங்கள்.!


இந்தியா உட்பட பல ஆசிய, ஐரோப்பிய நாடுகளுக்கும் அன்னியச் செலாவணியை அள்ளித்தருபவை வளைகுடா அரபு நாடுகளே. 

எனினும் ஒவ்வொரு நாடும் தனக்கென தனியானதோரு தொழிலாளர் நலச் சட்டங்களை கொண்டுள்ளன. 

இவற்றில் அமீரகத்தின் சட்டங்கள் உண்மையிலேயே பிற வளைகுடா நாடுகளின் தொழிலாளர் நல சட்டங்களைவிட மிகுந்த நெகிழ்ச்சிதன்மை உடையவை.

இந்நிலையில், காலத்திற்கேற்ற மாற்றம் தேவையென உணர்ந்த கத்தார் நாட்டின் அரசு மாற்றியமைக்கப்பட்ட தொழிலாளர் நல சட்டங்களை எதிர்வரும் 2016 டிசம்பர் 13 ஆம் தேதி முதல் அமுலுக்கு கொண்டு வருகின்றன. 

இவை தொழிலாளர் மத்தியில் வரவேற்பை பெறக்கூடிய வகையிலும் அமைந்துள்ளன. ஏனெனில், இப்புதிய திருத்தங்களால் இனி தடையில்லா சான்று தேவையில்லை (NOC), 2 வருட தடையில்லை (No 2 years ban), ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்க்கலாம் (Contract based employment), புதிய நிறுவனத்திற்கு மாறிக் கொள்ளலாம் (Job change freedom), நாட்டை விட்டு வெளியேற எக்ஸிட் விசா எனும் நடைமுறை இல்லை (No more exit permit) என ஏகப்பட்ட இல்லைகளுடனும் ஏராள நன்மைகளுடனும் அறிமுகமாகியுள்ளது.

சுருக்கமாக சிலவற்றை பார்ப்போம்...
புதிய சட்ட திருத்தத்தின்படி நடைமுறையிலுள்ள  ஸ்பான்சர்ஷிப் (Kafala) முறை ஒழிக்கப்பட்டு ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் முறை (Fully contract based) நடைமுறைக்கு வருகிறது. 

எனவே, ஒருவர் கத்தார் நாட்டிற்குள் பணிநிமித்தமாக நுழையுமுன்பே ஒப்பந்த பத்திரத்தில் கையெழுத்திட வேண்டும் மேலும் ஏற்கனவே ஸ்பான்சர்ஷிப் (Kafala) அடிப்படையில் பணியில் உள்ளவர்களும் ஒப்பந்த அடிப்படைக்கு மாற்றப்படுவர்.

இந்த புதிய திருத்தத்தின்படி, ஸ்பான்சர்ஷிப் அடிப்படையில் முன்பு பணியாற்றியவர்கள் எந்தவித தடையில்லா சான்றிதழும் (Noc) இன்றி உடனடியாக புதிய நிறுவனத்தில் அரசு அனுமதியுடன் வேலைக்கு சேரலாம்.

 புதிய ஒப்பந்த திட்டத்தின் கீழ் ஊழியரும் வேலை தருபவரும் பரஸ்பர ஓப்புதலின் அடிப்படையில் ஒப்பந்த காலம் என்பது குறைந்தது 2 வருடத்திலிருந்து 5 வருடங்கள் வரை நிர்ணயிக்கப்படும்.

ஓப்பந்த காலத்தில் பிற நாடுகளுக்கு எங்காவது பயணம் செய்வதாக இருந்தாலும் பணியாற்றும் நிறுவனத்தின் அனுமதி தேவையில்லை. 

மேலும் ஒப்பந்த கால முடிவிற்கு பின் நாட்டை விட்டு வெளியேறுபவர் எக்ஸிட் பெர்மிட் இன்றி நிறுவனத்திடம் தெரிவித்து விட்டு வெளியேறலாம். 

ஊழியரின் கோரிக்கையை அரசு பரிசீலித்து 3 நாட்களுக்குள் அனுமதி வழங்கும்.

அதேபோல் ஒரு நிறுவனத்தால் தண்டிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டவர் தன்னுடைய பணிநீக்கத்தை எதிர்த்து மேல்முறையீட்டுக்காக (Appeal) நீதிமன்றத்தை அணுகாதவர் அல்லது நீதிமன்றத்தால் மேல்முறையீடு தள்ளுபடி (Rejected Plea) செய்யப்பட்டவர்கள் 4 வருடங்களுக்கு நாட்டிற்குள் நுழைய தடை செய்யப்படுவர். 

மேலும் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவர்களுக்கு நீதிமன்றத்தின் தடையில்லா சான்றின்றி மீண்டும் உள்ளே வர அனுமதிக்கப்படவே மாட்டார்கள்.

ஒப்பந்த அடிப்படையில் ஒரு நிறுவனத்தில் பணியாற்றிவரும் நிலையில் வேறு நிறுவனத்திற்கு மாற விரும்பினால், பழைய நிறுவனத்தின் அனுமதியுடனும் அரசின் (MOI & MOLSA) ஒப்புதலுடனும் மாறிக்கொள்ளலாம்.

அவசரகால தேவையின் (Emergency Leave) போது நாட்டை விட்டு வெளியேற விரும்பினால் நிறுவனம் மற்றும் ஊழியரின் பரஸ்பர ஒப்புதலின் பேரில் உடனடியாக வெளியேறலாம்.

புதிய நிறுவனத்தில் வேலைக்கு சேருபவர்களுக்கு பழைய நிறுவனத்திடமிருந்து தடையில்லா சான்றிதழ் தேவையில்லை. மேலும் ஸ்பான்சர் இறந்தாலோ அல்லது நிறுவனம் மூடப்பட்டாலோ அந்த ஊழியர் வேறு நிறுவனத்தில் MOI & MOLSA அனுமதியுடன் வேலைக்கு சேர்ந்து கொள்ளலாம்.

கத்தார் தொழிலாளர் நல புதிய சட்ட திருத்தத்தின் முக்கிய அம்சங்கள்:
1. இப்புதிய திருத்தங்கள் இந்த 2016 வருடம் டிசம்பர் 13 ஆம் தேதி முதல் அமுலுக்கு வருகிறது.

2. வெளிநாட்டு ஊழியர்களின் வேலைவாய்ப்பையும் நாட்டில் தங்கியிருத்தலையும் முற்றிலும் ஒப்பந்த நடைமுறைக்குள் கொண்டு வருகிறது.

3. வேறு புதிய நிறுவனத்தில் வேலைக்கு சேர முன்பு 2 வருடங்கள் தடை செய்யப்பட்டது (No Ban) முழுமையாக விலக்கி கொள்ளப்படுகிறது.

4. புதிய நிறுவனத்தில் வேலைக்கு சேர பழைய நிறுவனத்தின் (ஸ்பான்சர்) தடையில்லா சான்று (No NOC) இனி தேவையில்லை.

5. புதிய ஒப்பந்த அடிப்படையில் வேலைவாய்ப்பு பெற்றவர்கள் ஒப்பந்தம் நடைபெற்ற அடுத்த நாளே வேறு நிறுவனத்திற்கு வேலைக்கு வரலாம்.(Based on visa process)

6. நாட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்பிருந்த வெளியேற்று அனுமதிமுறை (Exit permit system) ரத்து செய்யப்படுகிறது.

7. ஒருவர் நாட்டை விட்டு வெளியேற விரும்பினால் சுமார் 3 தினங்களுக்கு முன் நிறுவனத்திடம் தெரிவித்துவிட்டு அரசின் அனுமதிக்காக ஆன்லைனில் Metrash 2 System வழியாக தெரிவிக்க வேண்டும்.

8. ஏற்கனவே இங்கு பணியாற்றிவரும் அனைவருடைய ஒப்பந்தமும் இந்த வருட இறுதிக்குள் இப்புதிய ஒப்பந்த நடைமுறைக்கு மாற்றப்படும்.

9. ஓப்பந்தத்தில் கையெழுத்திடும் தேதியிலிருந்து ஒப்பந்த ஷரத்துக்கள் நடைமுறைக்கு வரும்.

10. வேலை ஒப்பந்தங்கள் அனைத்தும் தொழிலாளர் நலத்துறை அமைச்சகத்தின் (MOI) அங்கீகாரத்திற்கு உட்பட்டது.

11. காலம் வரையறுக்கப்பட்ட (Closed contracts) எந்த ஒப்பந்தமும் 5 வருடங்கள் மட்டுமே செல்லும்.

12. காலம் வரையறுக்கப்படாத திறந்தநிலை (Open contracts) ஒப்பந்த ஊழியர்கள் முதல் நிறுவனத்தில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணியாற்றிய பிறகே புதிய நிறுவனத்தில் பணியில் சேர முடியும்.

13. காலம் வரையறுக்கப்பட்ட ஒப்பந்த பணியாளர்கள் தங்களுடைய ஒப்பந்த கால நிறைவுக்குப் பின் தடையில்லா சான்றிதழ் இன்றி புதிய நிறுவனத்தில் வேலைக்கு சேரலாம் என்றாலும் உள்துறை அமைச்சகம் (MOI) மற்றும் தொழிலாளர் நல அமைச்சக (MOLSA) அனுமதி அவசியம் பெற வேண்டும்.

14. ஸ்பான்சர் இறந்துவிட்டால் அல்லது நிறுவனம் எந்தக் காரணத்தினாலாவது செயல்படாதிருந்தாலும் (Company no longer exist for any reason) ஊழியர்கள் புதிய நிறுவனத்தில் MOI & MOLSA ஆகியவற்றின் ஓப்புதலோடு வேலைக்கு சேலராம்.

15. அரசின் முன்அனுமதி பெறாமல் தன்னுடைய ஊழியரை பிற நிறுவனங்களில் வேலை பார்க்க அனுமதிக்கும் நிறுவனத்திற்கு 50,000 கத்தார் ரியால் அபராதம் விதிக்கப்படும்.

16. வெளிநாட்டு ஊழியர்களின் பாஸ்போர்ட்டை கையகப்படுத்தி வைத்திருக்கும் நிறுவனங்களுக்கு 10,000 முதல் 25,000 கத்தார் ரியால் வரை அபராதம் விதிக்கப்படும்.

Source: Qatartoday.com
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.