Breaking News
recent

துபாயில் ஓட்டுனர் உரிமத்தை ஆன்லைன் வழியாக மட்டுமே புதுப்பிக்க முடியும்.!


துபையில் ஒட்டுனர் உரிமங்களை புதுப்பிக்க சாலை மற்றும் போக்குவரத்து துறையின் (RTA) தலைமை அலுவலகத்திற்கோ அல்லது வாடிக்கையாளர் மையத்திற்கு (Customer happiness centers) நேரில் செல்ல வேண்டியிருந்தது. 

அவற்றிலிருந்து 4 வகையான சேவைகளை மட்டும் RTA App, Drivers & Vehicles App, Self-Service Machines (Smart Kiosk), website (www.rta.ae), Call Center (8009090) or the approved testing centers என இனி மேற்காணும் ஏதாவது ஒன்றில் வாயிலாக ஆன்லைனில் மட்டுமே புதுப்பிக்க முடியும்.

1. 21 வயதுக்குட்பட்டவர்களுக்கான ஒட்டுனர் உரிமம் புதுப்பித்தல் 2016 அக்டோபர் 16 ஆம் தேதி முதலும்

2. காணாமல் போன அல்லது சேதமடைந்த ஓட்டுனர் உரிமங்களுக்கு மாற்று உரிமங்களை பெற 2016 அக்டோபர் 30 ஆம் தேதி முதலும்

3. ஒட்டுனர் அனுபவ சான்றிதழ்களை பெற 2016 நவம்பர் 13 ஆம் தேதி முதலும்

4. 21 வயதுக்கு மேற்பட்டவர்களின் ஓட்டுனர் உரிமத்தை புதுப்பிக்க 2016 நவம்பர் 27 ஆம் தேதி முதலும்

மேற்கூறப்பட்ட வழிமுறைகளில் ஏதாவது ஒன்றின் மூலம் மட்டுமே ஆன்லைன் வழியாக அணுக வேண்டும்.

Source: Khaleej Times
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.