Breaking News
recent

இனி எட்டு மொழிகளில் அனுப்பலாம் ஈமெயில்.!


மின்னஞ்சல் தகவல் தொடர்பில் ஒரு புதிய சாதனையாக மும்பையைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று, ஒரே நேரத்தில் எட்டு மொழிகளில் மின்னஞ்சல் அனுப்பும் முறையைக் கண்டுபிடுத்துள்ளது. 

டேட்டா எக்ஸ்ஜேன் டெக்னாலஜிஸ் என்ற இந்த இந்திய நிறுவனத்தின் கண்டுபிடிப்புக்கு 'டேட்டா மெயில்' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. 

முற்றிலும் இலவசமாக தற்பொழுது வழங்கப்படும் இந்த 'மொழி சார் மின்னஞ்சல்' சேவையானது எட்டு இந்திய மொழிகளில் கிடைக்கும்.
மேலும் இந்த சேவையானது ஹிந்தி, குஜராத்தி, உருது, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு, பெங்காலி மற்றும் மராத்தி ஆகிய மொழிகளில் மின்னஞ்சல் முகவரிகளை உருவாக்கி கொள்ளவும் வழி செய்கிறது. 

ஆங்கிலத்தில் தவிர அரபி, ருஷ்யன் மற்றும் சீனம் உள்ளிட்ட சர்வதேச மொழிகளிலும் இந்த மின்னஞ்சல் சேவை வழங்கப்படுகிறது.

இந்த விபரங்கள் அனைத்தும் அந்நிறுவனத்தின் நிறுவனர் அஜய் தத்தா இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.