Breaking News
recent

உம்றா கடமைகளை நிறைவேற்ற 9 ஆயிரம் கிலோ மீட்டர் நடந்த இளைஞன்.!


பிரான்சிலிருந்து , மக்காவுக்கு  நடந்து சென்று உம்றா கடமைகளை நிறைவேற்றுவதற்கு உறுதி பூண்ட நபரொருவர் சவுதியை சென்றடைந்துள்ளார்.

ஸ்பெய்ன் நாட்டவரொருவரே இவ்வாறு சவுதியை சென்றடைந்துள்ளார்.

இஷாக் என்ற அவ்விளைஞன் சுமார் 9 ஆயிரம் கிலோ மீட்டர்களுக்கும் அதிகம் நடந்து சென்றுள்ளார்.

அவர் பிரான்ஸ் தலைநகர் பரிசிஸிலிருந்து கடந்த ஐந்தரை மாதத்துக்கு முன்னர் தனது நடைப்பயணத்தை ஆரம்பித்துள்ளார்.

இஷாக் தனது பயணத்தின் போது பல்வேறு சிக்கல்களுக்கு முகங்கொடுத்ததாக தெரிவித்துள்ளார்.

 உயரமான மலைகளைக் கடந்து செல்லல் , கடும் குளிர் ஆகியன என தெரிவித்துள்ளார்.

முன்னர் தனது பயண காலம் 50 நாட்களாக இருக்குமென தான் விஞ்ஞான ரீதியில் கணக்கிட்டிருந்ததாக இஷாக் குறிப்பிட்டுள்ளார்.

தனது பயண செலவுக்கு சுமார் 5 ஆயிரம் யூரோக்கள் தேவைப்படுமென அவர் முன்னதாக கணிப்பிட்டிருந்துள்ளார்.

 மேலும் அவர் தனது பயணத்தின் போது பலரும் வழங்கிய பணத்தினை ஏற்கவில்லையென தெரிவித்துள்ளார்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.